Flashback: 'அஜித் குமார் ஒரு தமிழன், வெளி ஆளா பாக்காதீங்க' - பெயர் பற்றிய கேள்விக்கு பளிச் பதில் சொன்ன அஜித்!

Ajith Kumar: நடிகர் அஜித் குமாரின் பழைய நேர்க்காணல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தான் ஒரு தமிழர் என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் பேசிய  வீடியோ வைரலாகி வருகிறது.

Continues below advertisement

விடாமுயற்சி

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவுக்கு வர இருக்கிறது. த்ரிஷா மற்றும் அர்ஜூன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. 

அஜித் தமிழர் இல்லையா?

அஜித் பற்றி காலம் காலமாக கூறப்படும் கருத்து என்றால், அது அவர் தமிழர் இல்லை என்பது தான். ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் எந்த நாட்டை, மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தல தலதான். ஆனாலும் இந்தக் கருத்து ஏதோ ஒரு வகையில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் அஜித் குமார் தான் ஒரு தமிழர் என்று ஆணித்தரமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நான் ஒரு தமிழன் தான்

இந்த வீடியோவில் அஜித் என்கிற பெயர் வடமொழிப் பெயரா என்று அஜித்திடம் கேட்கப்பட அதற்கு அவர் பதிலளிக்கிறார். “அஜித் குமார் என்கிற பெயர் வடமொழிப் பெயர்தான். ஆனால் நான் ஒரு தமிழன். நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். என் அப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். என் அம்மா வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.

ஆனால் அஜித் குமார் என்கிற நான் ஒரு தமிழன் தான், அதில் எந்த சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. எனக்கு படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. நான் பத்தாவது வரை தான் படித்திருக்கிறேன். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற வெறி எனக்கு இருக்கிறது. என்னுடைய பெயரை வைத்து நிறைய பேர் நான் தமிழன்  இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் முதலில் நான் ஒரு தமிழன் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் இந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

 


மேலும் படிக்க : Today Movies in TV, February 23: முழுக்க முழுக்க காதல்.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!

HBD Sakthi : விஜய் சேதுபதி மாதிரி நடிக்கணும்... பி.வாசு மகன் சக்தி இப்போ என்ன பண்றாரு?

Continues below advertisement
Sponsored Links by Taboola