Ajith : நாங்களெல்லாம் அப்பவே அப்படி.. விஜய்யை ட்ரோல் செய்யும் அஜித் ரசிகர்கள்... வைரலாகும் பழைய புகைப்படம்..!

20 ஆண்டுகளுக்கு முன்னரே அஜித் செய்து சமூக சேவைகளின் த்ரோபேக் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் அஜித் ஃபேன்ஸ்

Continues below advertisement

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி பள்ளி பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் கல்வி விருது விழா சென்னையில் நடைபெற்றது.

Continues below advertisement

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசளித்து, கல்வியின் அவசியம் மற்றும் அரசியல் பற்றியும் பல தகவல்களை பேசியிருந்தார். நடிகர் விஜய் அரசியலில் நுழைய ஆயத்தமாகி வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக வாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜய் அரசியல் குறித்து வெளிப்படையாக பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்று விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

நடிகர் விஜய் இந்த விருது விழாவில் பேசிய விஷயங்கள் கடந்த இரு தினங்களாக இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறியது. 

விஜய் நடத்திய விருது விழா :

சட்டசபை தொகுதி வாரியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை, பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார் நடிகர் விஜய். வருங்கால இந்தியாவின் இளம் நட்சத்திரங்களான உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி என தனது நெகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார். கல்வி பற்றியும் அரசியல் பற்றியும் வெளிப்படையாக விஜய் பேசிய சில விஷயங்கள் பெரிய அளவில் விமர்சிக்க பட்டு வரும் நிலையில் இதை பார்த்து அஜித் ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?

கலாய்க்கும் அஜித் ரசிகர்கள் :

தமிழ் சினிமாவின் இரண்டு முக்கியமான மாஸ் நடிகர்களாக இருந்து வரும் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் தனித்தனியாக மிகப்பெரிய  ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தாலும் அவர்களின் ரசிகர்களுக்குள் என்றுமே ஒரு போட்டி, பனிப்போர் நிலவி வருகிறது. அந்த வகையில் விஜய்யின் இந்த கல்வி விருது விழாவை வைத்து அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் சில புகைப்படங்களை பகிர்ந்து விஜய்யை ட்ரோல் செய்து வருகிறார்கள். 

அஜித்தின் த்ரோபேக் புகைப்படம் :

நடிகர் அஜித் 20 ஆண்டுகளுக்கு முன்னரே மாணவ மாணவியருக்கு, முதியவர்களுக்கு, பெண்களுக்கு என பல வகையில் ஊக்கத்தொகைகளை வழங்கியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னரே எங்க தல இதை எல்லாம் செய்து விட்டார் என த்ரோபேக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து விஜய் ரசிகர்களை சீண்டி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

Continues below advertisement