Indian 2 Update: இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதுதான்... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் கோலிவுட்... உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்!

நீண்ட நாள்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

எகிறும் எதிர்பார்ப்பு

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக,  நடிகர் கமல்ஹாசன்  - இயக்குநர் சங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2.

இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் கலக்கிய முதல் பாகம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததுடன், வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கி பல சிக்கல்கள், இடையூறுகளைக் கடந்து தற்போது கிட்டத்தட்ட நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

ரிலீஸ் தேதி இதுதான்

காஜல் அகர்வால், சித்தார்த்,  பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கிஷோர் , ஜி.மாரிமுத்து எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக இப்படம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாள்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்டேட் கொடுத்த காஜல்

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை காஜல் அகர்வால் தனது இந்தியன் 2 பட கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார். “இந்தியன் 2 படத்தில் தான் மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை செய்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கிறது. நான் இதுவரை ஒரு ரோலை செய்ததில்லை” எனப் பேசியுள்ளார்.

முன்னதாக இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இணைந்த தகவல் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அனிருத் - ஷங்கர் கூட்டணி

ஏற்கெனவே இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு சித்தார்த், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட 7 பேர் வில்லன்களாக நடிப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இசையமைப்பாளர் அனிருத் முதன்முறையாக இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் உடன் கைக்கோர்த்துள்ள நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் விக்ரம் படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் இரண்டாம் முறையாக அனிருத் கைக்கோர்த்துள்ளார். 

இந்நிலையில், முன்னதாக அனிருத், இயக்குநர் ஷங்கர் மேற்பார்வையில் கேரவேனில் அமர்ந்து உற்சாகமாக இசையமைக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.

மேலும் படிக்க: Adipurush Box Office: நெகட்டிவ் விமர்சனம் இருக்கட்டும்.. 3 நாள்களில் ரூ.340 கோடின்னா சும்மாவா? ஷாக் கொடுக்கும் ஆதிபுருஷ்!

Continues below advertisement