மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அஜித்குமார் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் , போனின் கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் படத்தில் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் படக்குழு. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் ஹச்.வினோத் படம் குறித்த நிறைய விஷயங்களை பகிந்துக்கொண்டுள்ளார்.வலிமை படம் அஜித்திற்காக எழுதப்பட்ட கதை இல்லையாம். வேறு ஒரு ஹீரோவிற்காக எழுதப்பட்ட கதை என தெரிவிக்கும் ஹச்.வினோத் வலிமை திரைப்படம் ஒரு போலிஸ் கதை என்பதை மறுத்துள்ளார். இந்த படம் இளைஞர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை அடிப்படையாக கொண்டது எனவும், அப்படியான பிரச்சனையில் சந்திக்கும் ஹீரோயின் , எப்படி தனது குடும்ப பிரச்சனைகளை தீர்க்கிறார் என்பதுதான் கதை என தெரிவித்துள்ளார். 






அஜித் குமாருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்த அவர், உண்மையிலேயே திரையில் மட்டுமல்ல நேரிலும்  மிகுந்த பிரம்மிப்பை ஏற்படுத்தக்கூடிய நடிகர் அஜித் குமார். இயக்குநருக்கு தேவை இருந்தால் எந்த மறுப்பும் சொல்லாமல் நடிப்பார், அது எவ்வளவு நேரம் ஷூட்டிங்காக இருந்தாலும் சரி ! மேலும் எனது கதையில் அஜித் சாருக்காக நான் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.வழக்கமாக அஜித் நடிப்பில் வெளியாகும் கமர்ஷியல் படங்களில் அவருக்கு கூடுதல் ஹைப் இருக்கும் . ஆனால் வலிமை படத்தில் அஜித் மிகுந்த நுட்பமான மற்றும் ஃபன்னான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . இது அவரது ரசிகர்களுக்கே மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் இயக்குநர். மேலும் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை அனுக நீங்க மிகச்சிறந்த மேதையாக இருக்க வேண்டியதில்லை. அந்த குற்றம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்த புத்திசாலியாக இருந்தால் போதும் அப்படியான கதாபாத்திரம்தான் வலிமை என ஹிண்ட் கொடுத்து ரசிகர்களுக்கு ஹைப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 






அஜித் நடிப்பில் உருவாக உள்ள அவரது 61 வது படத்தையும் ஹச்.வினோத் இயக்க போனி கபூர்தான் தயாரிக்கிறார். தலை 61 என அழைக்கப்பட்ட அந்த படம் தற்போது அஜித்தின் அறிவிப்பால்  AK61 என அழைக்கப்படுகிறது. இந்நிலையில்   AK61 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குநர் ஹச்.வினோத் அந்த படம் நிச்சயமாக ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்காது. டயலாக்ஸிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க உள்ளதாகவும் வழக்கமாக அஜித் படங்களில் இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை விட குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உலகம் எங்கிலும் நடக்கும் முக்கிய சமுதாய பிரச்னைகளை  AK61 படத்திற்காக கையில் எடுத்துள்ளதாகவும் இயக்குநர் ஹச்.வினோத் தெரிவித்துள்ளார்.