அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளிலேயே 2000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர். 


திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக பருவ கால அரசு நேரடி நெல்கொள் முதல் நிலைய பட்டியல் எழுத்தர் பணிக்கு 152 பணியிடங்களும் நேரடி நெல் கொள்முதல் நிலைய உதவுபவர் பணிக்கு 147 பணியிடங்களும், மற்றும் பாதுகாவலர் பணிக்கு 351 பணிடங்களும் என மொத்தம் 650 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பிக்கும் பணி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இன்று  தொடங்கியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணியானது நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. ஆண்கள் மட்டும் இந்த பணியில் சேர முடியும் என்று இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் பெண்களுக்கும் இந்த பணிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதல் நாளிலேயே குவிந்து வருகின்றனர். 




இதில், பட்டியல் எழுத்தர் பணிக்கு பட்ட படிப்பு படித்தவர்களும் உதவியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பாதுகாவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஏராளமான பட்டதாரிகள், பொறியியல் படித்தவர்கள், புதுமண தம்பதிகள், மாற்று திறனாளிகள், கை குழந்தையுடன் வந்தவர்கள் என 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க குவிந்து வருகின்றனர். விண்ணப்பம் வழங்க கடைசி நாள் ஜூலை 15 ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விண்ணப்பிக்க வந்திருந்த இளைஞர்கள் கூறுகையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற நிலை இருந்தும் பொறியியல் படித்த நாங்களும் விண்ணப்பித்திருக்கிறோம் காரணம் பி.இ முடித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லாமல் தவித்து வருவது தான், எங்களைப் போன்ற பல இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்கிற அடிப்படையில் இதற்கு விண்ணப்பிக்க வந்துள்ளோம் 650 காலி பணியிடங்களில் உள்ள நிலையில் முதல் நாளிலேயே 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வந்துள்ளோம் என்றார்.




மேலும் இதுகுறித்து பெண்கள் கூறுகையில், முதன்முறையாக இந்த பணிகளுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. மனிதர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையில் நாங்கள் விண்ணப்பிக்க வந்துள்ளோம் என்று கூறினர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண