தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜீத்குமார்.  இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் பெரியடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏகே 61  என்று அழைக்கப்படும் இந்த படத்தின் நாயகியாக மஞ்சுவாரியர் நாயகியாக நடித்து வருகிறார்.


ஏகே 61 படத்தின் திரைக்கதை தயாரிப்பு பணி, படப்பிடிப்பு பணிகள் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏகே 61 படத்திற்கான அப்டேட் ஏதும் நீண்ட நாட்களாக இல்லாமலே இருந்து வந்தது. இந்த நிலையில், ஏகே, 61 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகரான அஜய் இந்த படத்தில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.






இந்த படத்தில் அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தெலுங்கில் மகேஷ்பாபு, ராம்சரண், அல்லு அர்ஜூன், பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது, அஜீத் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருப்பதால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. அவர் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் புனேவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.


புனேவில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் அஜீத்துடன் இணைந்து அஜய் நடிக்க உள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகும் இந்த திரைப்படமானது உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட உள்ளது. வழக்கமான அஜீத் படங்களைப் போல இல்லாமல் சற்று மாறுபட்ட அஜீத் படமாக இது அமையும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.




அஜீத் ஏகே 61 படத்தில் நடித்த பிறகு விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் உடனடியாக ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர். அஜீத்குமாரின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய வலிமை திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்தின் இந்த படத்தையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Dhanush Salary : தி கிரே மேன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?


மேலும் படிக்க : Pathu thala: ‘பத்து தல’ படத்துக்காக சிம்பு செய்யும் காரியம் - அப்டேட் கொடுத்த இயக்குநர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண