தனது பெயருக்குப் பின்னான நடிகர் தனுஷ் பெயரை நீக்கியுள்ளார் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாத இறுதியில் தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்தார் இதையடுத்து நடிகர் தனுஷும் தனது வலைத்தளப் பக்கத்தில் தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.நடிகர் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கு லிங்கா, யாத்ரா என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
மணமுறிவுக்குப் பிறகு பயணி என்கிற இசை ஆல்பம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கி வருகிறார்.அதற்கான போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தனது பெயருக்குப் பின்னான நடிகர் தனுஷ் பெயரை நீக்கியுள்ளார் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா.