கொரோனாவில் இருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனி இசைப்பாடல் ஒன்றை இயக்கி உள்ளார். இந்த பாடல் நாளை வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் பாடல் ஹிட்டாக வேண்டுமென சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் அவர். அதில், “கையில் காபியோடு கடைசியாக எப்போது செய்தித்தாள் வாசித்தீர்கள்? கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்முடைய வாழ்க்கை முறையானதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. சிடி ப்ளேயர், லேண்ட் லைன் போன்கள் எல்லாம் எப்படி மறைந்துபோனதோ அதே போல பல மாற்றங்கள் உண்டாகியுள்ளன. இந்த பொருட்களெல்லாம் என்னுடைய மகன்களுக்கு தெரிவதில்லை. காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது, மாற்றங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய தினத்தை சிறப்பாக கடந்து செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். இந்த பயணத்தில் அன்பும், மகிழ்ச்சியுமே முக்கியம்! நிமிடம்தோறும் உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார். இந்த பதிவை பகிர்ந்து அவர் செய்தித்தாள் படித்து கொண்டிருப்பது போன்ற வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
வீடியோவைக் காண:
முன்னதாக, நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி கடந்த ஜனவரி மாதம் தங்கள் பிரிவை அறிவித்த போது, அது பேசுபொருளாக மாறியது. சமூக வலைத்தளங்களில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இது குறித்து அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். விவகாரத்து செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த ஐஸ்வர்யா, “கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், வாழ்க்கை தத்துவத்தை பேசும் கேப்ஷனை அவர் பதிவிட்டு பகிர்ந்திருக்கும் வீடியோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்