தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களின் பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. 



நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல ஆண்டுகள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட இருவரும் திடீரென ஒருமித்த கருத்துடன் விலகுவதாக அறிவித்தனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா மட்டும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அம்மா மற்றும் அப்பாவுடன் மாறி மாறி இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகன்களின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனது அம்மா லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக பரிமாற்றம் எடுத்து ஒரு சில படங்களை இயக்கியிருந்தார். தனுஷ் நடித்த 3 , கவுதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' மற்றும் சினிமா வீரன் என்ற டாக்குமெண்டரி திரைப்படத்தையும் இயக்கியுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே அவரவரின் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் என்றாலும் மகன்களின் விஷயங்களில் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். பல முறை மகன்களின் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று மகன்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். அவர்கள் முன்னர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரவும் பட்டன. 


அந்த வகையில் இன்று காலை, யாத்ரா மற்றும் லிங்காவின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ரிலே போட்டியில் முதல் பரிசை வென்று கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவிற்கு "எந்த சூரியனாலும் இந்த குழந்தைகளின் உற்சாகத்தை தடுக்க முடியாது... காலை சூரிய ஒளியில் ஒளிர்கிறார்கள். அங்கிருந்த எனது மகன்களை பார்த்து பிரகாசிக்கிறேன்" என பதிவிட்டு இருந்தார். 


இந்த ஸ்போர்ட்ஸ் டே நிகழ்வில் நடிகர் தனுஷ் மிஸ்ஸிங். இருப்பினும் அம்மாவுடன் பாட்டியும் கலந்து கொண்டு பேரன்களின் வெற்றியை கொண்டாடினார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.