Aishwarya Rai: ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? ரூ.1.54 கோடி சொகுசு கார், இடித்து நொறுக்கிய அரசு பேருந்து - வீடியோ வைரல்
Aishwarya Rai Car Accident: ஐஸ்வர்யா ராய்க்கு சொந்தமான சொகுசு காரின் மீது அரசுப்பேருந்து மோதிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Aishwarya Rai Car Accident: விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராயின் காரின் மதிப்பு சுமார் ரூ.1.32 கோடி என கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய் கார் விபத்து:
நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்தபோது, ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை. அவரது மெய்காப்பாளர்கள் மட்டுமே அந்த காரில் இருந்தனர். ஐஸ்வர்யா ராயின் கார் விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Just In




நடந்தது என்ன?
ஜூஹுவைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, பின்புறம் வந்த பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டிருந்ததாகவும், அதனால் ஐஸ்வர்யாவின் ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி, ஏன் ஹாரன் அடிக்கிறாய் என்று கேட்டார். எந்த விபத்தும் நடக்கவில்லை” என பதிலளித்துள்ளார். அதேநேரம், காரின் மீது பேருந்து லேசகாக மோதியதாகவும், காருக்கு எந்த பெரிய சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சாலையில் விவாதத்திற்கு பிறகு, ஐஸ்வர்யா ராயின் கார் அங்கிருந்து புறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்கள் கவலை
ஐஸ்வர்யா ராயின் கார் விபத்துக்குள்ளான தகவல் வெளியானதுமே, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்தார். அவர் நலமுடன் இருப்பார் என நம்புகிறேன். அவர் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன் என சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.
ரூ.1.32 கோடி மதிப்பிலான கார்:
விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் பயன்படுத்தும் காரின் பெயர் டொயோட்டா வெல்ஃபையர் ஆகும். அதன் தொடக்க விலை ரூ.1.22, அதிகபட்ச விலை ரூ.1.32 கோடி ஆகும். அனைத்து கட்டணங்களும் செலுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது, அதன் விலை குறைந்தபட்சம் ரூ.1.54 கோடி ஆக இருக்கும். Hi மற்றும் VIP Executive Lounge என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார், லிட்டருக்கு 19.8 கிமீ மைலேஜ் வழங்கும்.
பொன்னியின் செல்வன்
ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பகுதி 2 இல் காணப்பட்டார். படத்தில் அவரது நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார். துபாயில் நடந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் (SIIMA) முன்னணி வேடத்தில் சிறந்த நடிகைக்கான (விமர்சகர்கள்) விருதை வென்றார். மணிரத்னத்தின் காவிய வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் 2023 இல் வெளியிடப்பட்டது. நடிகை அபிஷேக் பச்சனை ஏப்ரல் 20, 2007 அன்று மணந்தார். அவர்கள் அமிதாப் பச்சனின் பங்களாக்களில் ஒன்றான பிரதிக்ஷாவில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு நவம்பர் 16, 2011 அன்று ஒரு மகள் பிறந்தார். அவரது ஆராத்யா என்பது குறிப்பிடத்தக்கது.