1973ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கர்நாடகாவின் மங்களூருவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா என ஏகப்பட்ட தமிழ் படங்களிலேயே வசனங்கள் வரும் அளவுக்கு அவரது வளர்ச்சி உயர்ந்தது. 1997ம் ஆண்டு இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராயை ஹீரோயின் ஆக்கினார் இயக்குநர் மணிரத்னம்.


இருவர் படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் ஷங்கரின் ஜீன்ஸ், ராஜிவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னத்தின் குரு, ராவணன் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் என குறிப்பிடத்தக்க தமிழ் படங்களில் நடித்துள்ளார். மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரமான நந்தினி தேவி மற்றும் மந்தாகினி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.



ரூ.1500 சம்பளம்


மாடலிங் உலகில் கால் பதித்தபோது, ஆரம்பத்தில் வெறும் 1,500 சம்பளத்துடன் வேலை பார்த்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால், தற்போது அவர் ஒரு விளம்பர படத்தில் நடித்தால் கூட பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். இந்நிலையில் அவர் மாடலிங் செய்ததற்காக வாங்கிய முதல் பில்லும், அந்த மாடல் போட்டோ ஷூட்டின்போது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் 'ஐஸ்வர்யா ராய்தானா?' என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


அந்த புகைப்படத்தை எடுத்த பேஷன் நிறுவனம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த நிறுவனம் ஒரு கேட்டலாகிற்காக அந்த புகைப்படங்களை எடுத்ததாக அவர் பதிவிட்ட டீவீட்டில் தெரிவித்துள்ளார். 






766 கோடி சொத்து


1997ம் ஆண்டு முதல் 2022 வரை 48 வயதிலும் லீடு ரோலில் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராய். தமிழ், இந்தி, வங்காளம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 766 கோடி ரூபாய் என்கின்றனர்.


அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை மணந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் மும்பையில் 112 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருகிறார். பாந்த்ராவில் 21 கோடி ரூபாய் மதிப்பில் ஐஸ்வர்யா ராய்க்கு தனி பங்களாகவே இருக்கிறதாம். மேலும், துபாயில் உள்ள ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்டில் அவருக்கு சொகுசு வில்லா ஒன்றும் இருக்கிறதாம்.






ஒரு நாள் சம்பளம்?


நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு நாள் நடிக்க 6 முதல் 7 கோடி ரூபாயை சம்பளமாக விளம்பர படங்களுக்கு வாங்கி வருவதாகவும், திரைப்படங்களில் நடிக்க 10 முதல் 12 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும், ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி வரை அவர் சம்பாதித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். நடிகர் விஜய் வைத்திருப்பது போல ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அதன் மதிப்பு 7.95 கோடி ரூபாய். மேலும், 1.60 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ், 1.58 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி ஏ8எல் கார், 2.33 கோடி மதிப்புள்ள லெக்சஸ் எல் எக்ஸ் 570 மற்றும் 1.98 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் எஸ்500 உள்ளிட்ட ஏகப்பட்ட சொகுசு கார்களும் உள்ளனவாம்.