பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். இவ்வாறு நடத்தப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகெங்கும் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்வர். இந்த வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் இதுவரை சாரா அலி கான், மிருணாள் தாக்கூர் ஆகியோர் கண்கவர் ஆடையில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தனர். ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டார். ஆனால் அவர் வெகுவாக ட்ரோல் செய்யப்படுகிறார். அனுஷ்கா சர்மா கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டார். கான் திரைப்பட விழாவில் 2002 ஆம் ஆண்டு முதல் கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யா ராய் 19 ஆவது முறையாக இந்த வருடமும் பங்கேற்றுள்ளார். ஆனால் நேற்று இரண்டாம் நாளில் அவர் அணிந்து வந்த ஆடை காரணமாக அவர் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்படுகிறார்.
வியாழன் இரவு அவர் கேன்ஸ் விழா சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாய் களமிறங்கினார். சோஃபி கூட்டர் ரேக்ஸ் வடிவமைப்பில் சில்வர் நிற கவுனில் அவர் வந்தார். அவரது கழுத்தை சுற்றி ஒரு ஃபாயில் ரேப் இருந்தது. அதுதான் தற்போது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படுகிறது.
நிறைய பேர் தாங்கள் ஐஸ்வர்யா ராயை காண ஆவலாக இருந்ததாகவும் ஆனால் இம்முறை அவர் தனது ஆடை வடிவமைப்பால் ஏமாற்றத்தையே அளித்ததாக தெரிவித்தார்.
இன்னொரு நபர் ட்ரெஸ் நல்லாத்தான் இருக்கு ஆனால் எதுக்கு கழுத்தைச் சுற்றி ஃபாயில் கவர் போட்டிருக்கிறார் என்று கிண்டல் செய்துள்ளார்.
மற்றொருவர், கிறிஸ்துமஸ் ரேப், ஃபாயில் ரேப் என்று ஆண்டுக்காண்டு ஐஸ்வர்யா ராய் ஏமாற்றுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
முதல் நாளில் ஐஸ்வர்யா ராய் எமரால்ட் பச்சை நிற கவுன் அணிந்துவந்தார். அதுவும் பெரும் வரவேற்பைப் பெறவில்லை.
லைக்ஸை அள்ளும் மிருணாள் தாக்கூர்..
அதே வேளையில் இளம் நடிகை மிருணாள் தாக்கூர் தனது கேன்ஸ் அப்பியரன்ஸுக்காக அப்ளாஸ் அள்ளிக் கொண்டிருக்கிறார். இந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் கடந்த ஆண்டு வெளியான துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனார். இந்நிலையில் இவர், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கான் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். இவர், இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்வது இதுவே முதன்முறை. கான் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள மிருணாள், வெள்ளி நிறத்தில் ஜொலிக்கும் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பகிர்ந்த மிருணாள், லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
சேலையில் வந்த தேவதை..
பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலி கான் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். முதல் நாள் அன்று டிசைனர் லெஹங்காவில் சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தார். எத்தனையோ மாடர்ன் உடை இருக்க அவர் லெஹங்காவை தேர்வு செய்தது இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இதையடுத்து மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சாரா அலி கான். முதல் நாள் லெஹங்காவில் வந்த சாரா அலி கான் மறுநாள் வெள்ளை நிற சேலையில் தேவைதயாக காட்சியளித்தார்.