சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


கொரோனா பெருந்தொற்றால் நடந்த அதிர்ச்சி:


உலகையே கட்டிப்போட்ட கொரோனா எந்தளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. 


இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 337 மில்லியன் ஆயுட்காலம் இழக்கப்பட்டது என்றும் லட்சக்கணக்கான மக்கள் அகால மரணமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோடிக்கணக்கான ஆயுட்காலம் இழப்பு:


உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆண்டு புள்ளிவிவர அறிக்கையில், "இதய நோய், புற்று நோய், நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களால் வீக்கம் பிரச்னை அதிகரித்து வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. தொற்றுநோய் உலகளவில் பேரழிவை ஏற்படுத்தியது அதிகாரப்பூர்வமாக கிட்டத்தட்ட ஏழு மில்லியன் (70 லட்சம்) மக்களைக் கொன்றது. உண்மையான எண்ணிக்கை 20 (2 கோடி) மில்லியனுக்கும் அருகில் இருக்கும் என்று நம்பப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் 50 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்தனர். 


"ஒவ்வொரு கொரோனா மரணத்திற்கும் 22 வருட வாழ்க்கையை இழப்பது போன்றது. நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளில், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டது. இறப்புகள் முறையே மூன்றில் ஒரு பங்காகவும் அதற்கு பாதியாகவும் குறைந்துள்ளன.


உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை:


எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்களின் நிகழ்வும் கணிசமாகக் குறைந்துள்ளது. அகால மரணம் ஏற்படும் அபாயமும் குறைந்தது. ஆனால், தொற்றுநோய் தாக்கம் அனைத்தையும் தலைகீழாக்கியது. உலகளாவிய ஆயுட்காலம் 2000 இல் 67 ஆண்டுகளில் இருந்து 2019 இல் 73 ஆக உயர்ந்தது.


உயர்தர சுகாதாரப் பாதுகாப்பு, வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் நிதிப் பாதுகாப்பிற்கான அணுகல் ஆகியவற்றில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக்கியது.


உலகம் இன்னும் ஒட்டுமொத்த ஆரோக்கிய முன்னேற்றத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில், தொற்றாத நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் இறப்புகளின் பங்கு அதிகரித்து வருகிறது. 2000 ஆம் ஆண்டில், ஆண்டுதோறும் ஏற்படும் உலகளாவிய இறப்புகளில் சுமார் 61 சதவீதம் தொற்றாத நோய்களுடன் தொடர்புடையது. 2019 வாக்கில், கிட்டத்தட்ட 74 சதவீதம் உலகளாவிய இறப்பு தொற்றாத நோய்களுடன் தொடர்புடையது" " என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.