ஐஸ்வர்யா ராய்
சினிமாவில் நாளுக்கு நாள் விவாகரத்து செய்தி அதிகரித்து வரும் நிலையில், சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையிலான விவாகரத்து செய்தி தான் தென்னிந்திய திரையுலகில் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த தகவலை ஊரறிய செய்யும் விதத்தில், குடும்ப பெயரை நீக்கி இவருடைய பெயர் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது.
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், திருமணம் செய்து கொள்வதற் முன்னதாக சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர். பின்னர் 2007 ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார். தற்போது அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து?
எனினும், நாளுக்கு நாள் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இடையிலான விவாகரத்து செய்தி சமூக வலைத்தளத்தில் அதிகரித்து வந்தது. இதற்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணமாக சொல்லப்பட்டது. அதோடு இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் பாலிவுட் மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின. மேலும், மகள் ஆராத்யா ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவாகரத்து வதந்தி குறித்து அபிஷேக் பச்சன் மறுப்பு தெரிவித்திருந்தார். அதில், என்னை சுற்றி வரும் வதந்திகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நம்பிக்கையுடன் இருந்தால் எவற்றிலிருந்தும் மீண்டு வரலாம் என்று கூறியிருந்தார். இதே போன்று ஐஸ்வர்யா ராய் விவாகரத்து வதந்தி குறித்து எதுவும் கூறாத நிலையில், தற்போது துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் தன்னுடைய குடும்ப பெயரான பச்சன் என்பதை நீக்கி வெறும் ஐஸ்வர்யா ராய் என்றே அழைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்தி உண்மையாக இருக்குமோ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகை சமந்தாவும் இதே பாணியில் தன்னுடைய குடும்ப பெயரை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி தான் விவாகரத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.