மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தமாக 18 செமீ மழையானது பதிவாகியுள்ளது.
அக்டோபர் 15 -தில் துவங்கிய மழை
தமிழ்நாடில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பெரும் மழைக்கு வழிவகுத்தது.
3 கி.மீ. வேகத்தில் நகரும் புயல் சின்னம்
இந்நிலையில் அது நேற்று மாலை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகராமல் ஒரே இடத்தில் நீடித்தது வருகிறது. மேலும், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் நவம்பர் 30 -ம் தேதி கரையைக் கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு இலவசம் - மயிலாடுதுறையில் தவெகவினர் சிறப்பு ஏற்பாடு
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தொடர் கனமழை காரணமாக புதுச்சேசி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (28.11.2024) விடுமுறை அளித்து, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
எட்டு மாவட்டங்களுக்கு மழை
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இன்று நவம்பர் 28 -ம் தேதி காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம்,கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
திமிறி எழும் கடல்; 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ... என்ன நடக்க போகிறது ?
மாவட்டத்தின் மழையளவு
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 43 செமீ மழையும், குறைந்த அளவாக 17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை - 27.50 மில்லி மீட்டர், சீர்காழி -43 மில்லி மீட்டர் தரங்கம்பாடி - 32 மில்லி மீட்டர், கொள்ளிடம் - 22.60 மில்லி மீட்டர், மணல்மேடு 17 மில்லி மீட்டர், செம்பனார்கோயில் - 37 மில்லி மீட்டர் என மழையானது பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 29.85 மில்லி மீட்டர் (3 செமீ ) மழையானது பதிவாகியுள்ளது. மொத்த மழை அளவு 178.10 மில்லி மீட்டர் ( 18 செமீ ) ஆகும்.