ஐஷ்வர்யலஷ்மிக்கு இன்று பிறந்தநாள்


மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சில தினங்களுக்கு முன்பு தனது சுற்றுலா புகைப்படங்களை இணையதளத்தில் பகிந்துள்ளார். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் தான் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.


கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி, 2014ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் கால் பதித்தார். அதன் மூலம் சில பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் தோன்றியதோடு மட்டுமல்லாமல், சில விளம்பரங்களில் தலை காட்டினார்.


இதன் விளைவு ஐஸ்வர்யா லட்சுமியை சினிமாவுக்கு அழைத்து வந்தது. 2017ஆம் ஆண்டு ‘நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அவர் அறிமுகமானார். அப்படம் அவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. தொடர்ந்து மாயாநதி, வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜென்டினா ரசிகர்கள் காட்டூர்கடவு, பிரதர்ஸ் டே என பல மலையாளப் படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 


பூங்குழலி


இதனைத் தொடர்ந்து தமிழில் மணிரத்னம் இயக்கிய பொன்னியில் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் தோன்றிய ஐஸ்வர்யா, தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி உள்ள ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படத்தில் தாரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.


சினிமாவிற்கு நன்றி






சமீபத்தில் பாலிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டார் ஐஸ்வர்யா. தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததோடு ஒரு சின்ன பதிவையும் இணைத்துள்ளார். அதில் “பாலிக்கு சுற்றுலா பயணம் சென்றது நான் செய்ததில் ஒரு அற்புதமான செயல்.


பாலி எனது சொந்த ஊரான கேரளாவைப் போலவே எப்படி இருக்கிறது என்று நான் பல மணி நேரங்கள் யோசித்துக் கொண்டிருந்தேன். மனம் போன போக்கில் சுற்றித் திரிந்து, இங்கு இருக்கும் கட்டடக் கலையை ரசித்து பல்வேறு உணவு வகைகளை சாப்பிட்டுத் திரிந்தேன்.


தனிப்பட்ட ரீதியாக எனக்குள் இருந்த ஒரு சிறு குழப்பத்தை தீர்த்துவைக்க பாலி எனக்கு உதவி செய்திருக்கிறது. அதே நேரத்தில் இப்படியான ஒரு பயணத்தை சாத்தியப்படுத்திய எனது தொழிலான சினிமாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாரும் சொல்வது போல் வாழ்க்கை புதிரானது தான், அதில் நீங்கள் செய்யும் மேஜிக்கை நிகழ்த்திக் கொண்டே இருங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.