நடிகர் அர்ஜூன் தாஸூடன், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 


மாயநதி, வரதன் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் நடிகர் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம்  பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், அடுத்ததாக தனுஷூடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார்.






ஓடிடியில் இப்படம் வெளியாகி ஐஸ்வர்யா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்த கட்டா குஸ்தி திரைப்படம், ஐஸ்வர்யா லட்சுமிக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். 


இதனிடையே கைதி படத்தின் மூலம் மிரட்டலான வில்லனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். அவரின் குரலும், வில்லத்தனமும் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தகாரம், மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸூடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 






அதில் கேப்ஷனாக ஹாட்ட்டின் ஸ்மைலி இருக்கும் நிலையில், இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.மேலும் பலரும் கமெண்டில் இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேள்வியெழுப்பியுள்ளனர். அதேபோல் ஒருவேளை இந்த தகவல் உண்மையானால் அர்ஜூன் தாஸூக்கு ஃலைப் டைம் செட்டில்மென்ட் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.