ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 21வது படம் குறித்த ஒரு அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார் அந்நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி. குக் வித் கோமாளி புகழ் பவித்ரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவிருக்கும் இந்த படத்தில் நாயகனாக களமிறங்குகிறார் நகைச்சுவை நடிகர் சதீஷ். இளம்வயதில் பல கஷ்டங்களை அனுபவித்த நடிகர் சதீஷ் தனது 14 வயதில் பிரபல நடிகர் கிரேசி மோகனின் நாடங்களில் நடிக்க தொடங்கினார்.

#AgsEntertainment is happy to announce our next film @Ags_production #21
#KalpathiAghoram#KalpathiGanesh #KalpathiSuresh @aishkalpathi @actorsathish @itspavitralaksh @KishoreRajkumar @venkat_manickam @ajesh_ashok @praveenzaiyan @Ram_Pandian_90#MGMurugan @onlynikil pic.twitter.com/oiGMRS7NSD
— Archana Kalpathi (@archanakalpathi) April 7, 2021

பலவருட போராட்டத்திற்கு பிறகு 2010ம் ஆண்டு வெளியான தமிழ் படம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த 10 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சதீஷ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே படத்திலும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் புதிதாக இயக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனை அவர் நடிக்கவுள்ளார்.

Thank u so much for Your Support @Siva_Kartikeyan Nanba
Always & AsUsual
Love u 🤗😍🤗 pic.twitter.com/6YfpYeitVg
— Sathish (@actorsathish) April 7, 2021

சென்னையில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்திரனாக பங்கேற்று படக்குழுவை வாழ்த்தினர். கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் அஜேஷ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.