இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்திருந்தார் நடன கலைஞரும், நடன இயக்குனருமான வசந்தி. இவர் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம்; திரைப்படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் 2 படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றார்.


இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் திரைப்படத்தில் வசந்தி தனது மலையாள சினிமா பயணத்தை தொடங்க இருக்கிறாராம். இந்த படம் திரில்லர் படம் என கூறப்படுகிறது. பெயர் வைக்காத இந்த திரைப்படம் இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிறது‌. சூட்டிங் ஸ்பாட்டில் வசந்தியும் நடிகர் மம்முட்டியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



மலையாளத் திரைஉலகில் களமிறங்கும் தமிழ் நட்சத்திரங்கள் :


மம்முட்டி - வசந்தி இணையும் இந்த திரைப்படத்தில் முன்னணி தமிழ் நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, அமலா பால், சினேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். சமீபத்தில் தமிழில் வெளியான எதற்கும் துணிந்தவன், டாக்டர் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் வினய் ராய், பி.உன்னிகிருஷ்ணனின் திரில்லர் படமான இந்த படம் மூலம் தனது மலையாள அறிமுகத்தை தொடங்க இருக்கிறார். இந்த படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் கதாசிரியர் உதய கிருஷ்ணா, ஒளிப்பதிவாளர் ஃபயஷ் சித்திக் ஆகியோர் ஆவர். இசையமைப்பாளர் ஜஸ்டின் வர்கீஸ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் 'ப்ரமணி' திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தில் இரண்டாம் முறையாக நடிகர் மம்முட்டியுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய் அஜித்துடன் நடித்த ஏஜென்ட் டீனா !


நடிகர் விஜய்யின் பகவதி படத்தில் வருகின்ற 'அள்ளு அள்ளு'  பாடலில் வசந்தி நடனமாடி உள்ளார். அதேபோல் நடிகர் அஜித் படமான வில்லன் படத்திலும் பகவதி பட பாடலில் அணிந்திருந்த அதே உடையில் நடனமாடி இருப்பார். நடன இயக்குனரான வசந்தி, லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் ஸ்டண்ட் சீன்களிலும் கலக்கி இருப்பார். அவரது  சண்டை காட்சிகள் அனைத்தும் மிக தத்ரூபமாக இருக்கும். அதனால் ரசிகர்களும் சினிமா வட்டாரமும் ஏஜென்ட் டீனாவுக்கு பாராட்டு மழையை பொழிந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண