குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து தற்போது செஃப் தாமுவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களை கட்டிப் போட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமைப்பது என்பது ஒரு கலை என்பார்கள். அப்படி சமையலை வைத்து மாஸ்டர் செஃப் போன்ற நிறைய நிகழ்ச்சிகள் ஆங்கிகிலத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்து சமையல் + காமெடி என்று ஒரு காட்செப்ட்டை கொண்டு வந்தது குக் வித் கோமாளி. வெற்றிபெற கடுமையான போட்டி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் ஒருபோதும் நகைச்சுவைக்கு குறை இருந்தது இல்லை.
ஒரு திறமையான குக் அவருடன் ஒரு திறமையான கோமாளி என ஜோடி சேர்த்து விட்டு அவர்களை சமைக்கவிட்டு வேடிக்கை பார்த்து ரவுஸு செய்யும் நடுவர்கள் என ரசிகர்களில் மிக பிடித்தமான ஒரு ஷோவாக மாறியுள்ளது. இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களில் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்தார்கள். ஸ்ட்ரிக்டாகவும் ஜாலியாகவும் இவர்கள் போட்டியாளர்களை நடத்தும் விதம் அபாரமானது. இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியின் 5 ஆவது சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தார்கள்.
வெங்கடேஷ் பட் விலகல்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இந்த செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் தான் பங்கேற்க போவதில்லை என்று தகவல் வெளியிட்டு அதிர வைத்தார். “கிட்டதட்ட 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு வரும் மற்ற வாய்ப்புகளுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். மேலும் விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான கதை கொண்ட நிகழ்ச்சியின் மூலம் உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்கு முன்பாகவே, தற்போது இன்னொரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் செஃப் தாமு.
செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தானும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். தானும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து புதிதாக ஒரு ஷோவை தொடங்க இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் இருவரையும் பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.