ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் எலிமினேட்டர் 1, (பிப்ரவரி 26) இன்று பாட்னா பைரேட்ஸ் அணியுடன் தபாங் டெல்லி கேசி அணி மோதவுள்ளது.


ப்ரோ கபடி லீக் 2024 சீனன் 10ன் பிளே ஆஃப்கள் இன்று முதல் தொடங்குகிறது. எலிமினேட்டர் சுற்றின் முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது தபாங் டெல்லி கேசி அணி. இந்த போட்டியாஅது ஹைதராபாத்தில் உள்ள கச்சிபெளலி உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 


இரு அணிகளும் கடந்த போட்டியில் எப்படி..? 


கடந்த பிப்ரவரி 18ம் தேதி பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இன்றைய போட்டியில் தபாங் டெல்லி கேசி அணி களமிறங்குகிறது. அந்த போட்டியில் டெல்லி அணி 46-38 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. மேலும், இது ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் இந்த அணியின் 13வது வெற்றியாக அமைந்தது. மறுபுறம், கடந்த 16ம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான கடைவி ஆட்டத்தில் 32-29 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தபாங் டெல்லி கேசி அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 19 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில், அதிகபட்சமாக தபாங் டெல்லி கேசி அணி 9 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. பாட்னா பைரேட்ஸ் அணி 8 முறை வென்றுள்ளது. மேலும், 2 போட்டிகள் டை ஆகியுள்ளது. 


கடைசியாக தபாங் டெல்லி கேசி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய போட்டியானது 39-39 என டையில் முடிந்தது. 


இந்த ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் இதுவரை 22 போட்டிகள் விளையாடியுள்ள தபாங் டெல்லி கேசி அணி, 13 வெற்றி, 6 தோல்வி, 3 டைகளுடன் 79 புள்ளிகளை குவித்து புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், பாட்னா பைரேட்ஸ் 69 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்தது. 


இரு அணிகளின் விவரம்: 


தபாங் டெல்லி:


ரைடர்கள்- மன்ஜீத், மீது குமார், அஷு மாலிக், சூரஜ் பன்வார்.


டிஃபெண்டர்- விஷால் பரத்வாஜ், சுனில், பாலாசாகேப் ஜாதவ், நிதின் சண்டல், விஜய், ஹிம்மத் அன்டில், ஆஷிஷ், யோகேஷ், விக்ராந்த், பெலிக்ஸ் லி, யுவராஜ் பாண்டேயா, மோஹித்.


ஆல்-ரவுண்டர்- ஆகாஷ் பிரஷர், ராகுல் குமார்.


பாட்னா பைரேட்ஸ்:


ரைடர்கள்- ராகேஷ் நர்வால், மன்ஜீத், சச்சின், குணால் மேத்தா, சுதாகர் எம், ரஞ்சித் நாயக், அனுஜ் குமார், சந்தீப் குமார், ஜெங்-வெய் சென்.


டிஃபெண்டர்கள் - நீரஜ் குமார், மகேந்திர சவுத்ரி, கிரிஷன், மனீஷ், தியாகராஜன் யுவராஜ், நவீன் சர்மா, அபிநந்த் சுபாஷ், சஞ்சய், தீபக் குமார்.


ஆல்-ரவுண்டர்கள்- சஜின் சந்திரசேகர், ரோஹித், டேனியன் ஒதியம்போ, அங்கித்.


இன்று படைக்கவிருக்கும் சாதனை: 


பாட்னா பைரேட்ஸ் அணியின் சுதாகர், ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 100 ரெய்டு புள்ளிகளை எட்ட இன்னும் 6 ரெய்டு புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. 


ப்ரோ கபடி லீக் சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது..? 


ப்ரோ கபடி சீசன் 10ல் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்-களிலும் கண்டுகளிக்கலாம்.