ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். ருக்மினி வசந்த் , பிஜூ மேனன் , விக்ராந்த் , வித்யுத் ஜம்வால் ஆகியோர் நடித்துள்ளார்கள் . மதராஸி படத்தின்  இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார் . மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீது பாசிட்டிவான அபிப்பிராயத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் சென்சார் வாரியம் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்காமல் இருந்தால் போதும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

மதராஸி படத்திற்கு A சான்றிதழ் 

அண்மையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதால் இந்த படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டது. கூலி படத்தில் அதீத வன்முறை காட்சிகள் இருந்ததாலும் துறைமுகத்தில் கடத்தல் நடப்பதாக படத்தின் கதையில் இருப்பதால் இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால்  பிவி.ஆர் , ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகள் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை படத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் பல திரையரங்குகளில் மக்கள் திரையரங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.  கூலி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கும்படி உயர் நீதிமன்றத்தில் படக்குழுவினர் மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமிருப்பதால் U/A சான்றிதழ் வழங்க முடியாது என சென்சார் வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மதராஸி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டால் அது படத்தின் வசூலை பாதிக்கும். சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக வன்முறை காட்சிகள் கொண்ட படமாக மதராஸி திரைப்படம் உருவாகியுள்ளது. இதனால் இந்த படத்திற்கு சென்சார் வாரியம் A சான்றிதழ் வழங்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் அஞ்சுகின்றனர் . சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே பெற்றோர்கள் , குழந்தைகள் என குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய வைகையில் இருக்கும். ரஜினி , விஜய்க்குப்பின் குழந்தைகளை அதிகம் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் . இப்படியான நிலையில் மதராஸி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டால்  இப்படத்தின் வசூலில்  பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.