Chennai Power Shutdown: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (26.08.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணி தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அறிவிக்கப்பட்ட  இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை,  மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்

நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

தாம்பரம்:  முடிச்சூர் கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், கோபால் நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், பரத் நகர், முல்லை நகர், கனகம்மாள் கோயில் தெரு, விஜயா நகர், நேரு நகர் பாம்பன்சாமிகள் சாலை, சி.வி.ராமன் தெரு, லெனின் தெரு, உ.வே.சாமிநாதன் தெரு, வள்ளியம்மை தெரு,   சுதா அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, நிஷா அவென்யூ.

தேனாம்பேட்டை:  எல்லையம்மன் காலனி, போயஸ் கார்டன், ஜேஜே சாலை, கேஆர் சாலை, முரேஷ் கேட் சாலை, சேஷாத்ரி சாலை, பஷீர் அகமது தெரு, அம்புஜம்மாள் தெரு, எஸ்எஸ் ஐயங்கார் தெரு, வீனஸ் காலனி 1வது மற்றும்  2 வது  தெரு, மகாராஜா சாலை.

பாரிவாக்கம்:  கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.

கோவிலம்பாக்கம்:  வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்தூர், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர்.

நன்மங்கலம்:  ஹஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.