Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 45 படத்தின் பூஜை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது

சூர்யா
பெரும் உழைப்பாலும் பொருட்செலவாலும் உருவான சூர்யாவின் கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று திரைப்படமாக உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இப்படத்தின் தோல்வி தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என மூன்று தரப்பையும் மனதளவில் பாதித்துள்ளது என்றே சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவின் படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் காணப்படுகிறார்கள். இனி மீண்டும் ஒரு வருடம் அடுத்த படத்திற்காக அவர்கள் காத்திருக்கும் நிலை. சமீபத்தில் சூர்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரவலாக ஷேர் செய்யப்பட்டது. இதில் சூர்யா வழக்கமான உற்சாகமில்லாமல் சோர்ந்து காணப்பட்டார். கங்குவா படத்தின் தோல்வி சூர்யாவை தனிப்பட்ட முறையில் ரொம்பவும் பாதித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். கங்குவா படத்தின் தோல்வியை கடந்து சூர்யா மீண்டு வரவேண்டும் அடுத்த ஆண்டு சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் தான் சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சூர்யா 45
சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி இயக்குகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. முன்னதாக ஆர்ஜே பாலாஜி எல்.கே பாலாஜி படத்திற்கு திரைக்கதை மற்றும் முக்குத்தி அம்மன் படத்தை இயக்கியிருக்கிறார். முந்தைய இரு படங்களும் காமெடி ஜானரை சேர்ந்தவை. ஆனால் தற்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கப்போகும் படம் ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜி சூர்யா காம்போவில் இப்படம் எந்த மாதிரியான ஒரு அனுபவமாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்களும் ஆர்வமாக காணப்படுகிறார்கள்.
Just In
சூர்யா 45 படத்தின் பூஜை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் சூர்யாவை மகிழ்ச்சியாக பார்த்த ரசிகர்கள் கங்குவா படத்தின் தோலியை மறந்து சூர்யா இந்த புதிய படத்திற்காக தயாராகிவிட்டார் என தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்