ஜெயலலிதா நினைவிடத்திற்கு பேரணி - மனு

Continues below advertisement

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் 

அப்போது பேசிய அவர்; 

Continues below advertisement

உலகம் முழுவதும் பேசப்பட்ட  அனைத்து தரப்பட்ட மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவி அம்மா. பல்வேறு திட்டங்களை படைத்து அனைத்து தரப்பட்ட மக்களிடமும் அன்பாக தனது வாழ்நாளில் அனைத்து மக்களும் போற்றப்படக்கூடிய முதலமைச்சராக இருந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள் டிசம்பர் 5 மறைந்தது தமிழர்களுக்கு பேரிடியாக அமைந்தது. 

அவரது நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி உள்ள நிலையில் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் வருகின்ற 5 ஆம் தேதி அம்மா நினைவிடத்திற்கு நினைவஞ்சலி புகழஞ்சலி செலுத்த உள்ளோம். 

காலை 9.30  மணி அளவில் இருந்து 11 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு அனுமதியும் பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான அனுமதி வழங்க கோரி மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். டிசம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை உறுதிமொழி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு வழங்க வேண்டி மனு கொடுத்துள்ளோம்.

தமிழகத்தில் கரையான் ஆட்சி 

நம் தவறு செய்தால் உடனடியாக காவல்துறையினர் நீதிமன்றம் மூலமாக நமக்கு தண்டனை கொடுப்பார்கள் என்ற எண்ணம் தற்பொழுது இல்லை. அதனால் அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் கரையான் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் கலவர கூட்டம் தான் நடக்கிறது  என்ற உதயநிதி பேச்சு குறித்தான கேள்விக்கு , 

இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரை பேசக் கூடாது என பார்க்கிறேன். அவர்களுக்கு என்ன யோகிதை இருக்கிறது இதைப் பற்றி பேச வேண்டாம். பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை, அதிமுகவை தேடி தான் கூட்டணிக்கு வருவார்கள், ஜெயிக்கும் குதிரையில் தான் பந்தயம் கட்டுவார்கள். அதிமுகவில் பூசல் இருக்கிறது அதன் வெளிப்பாடாக திண்டுக்கல் சீனிவாசன் பேசி இருக்கிறார். அதன் பிறகு அவரே இதனை மறுத்தும் இருக்கிறார்.

அதானி விவகாரத்தில் திமுக ஏன் மௌனம் காக்கிறது. திமுகவிற்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மீனவர்கள் பிரச்சனை இப்படி போன்ற பல பிரச்சனைகளை பற்றி திமுக பேசவில்லை.

அதிமுகவில் மீண்டும் இணைப்பு - பொதுச் செயலாளர் முடிவு

அதிமுகவில் யாரும் பிரிந்து செல்லவில்லை பொதுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. சசிகலா , ஓபிஎஸ் , டிடிவி மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர மற்றவர்களை கட்சியில் சேர்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். தாலிக்கு தங்கம் திட்டம் மடிக்கணிணி திட்டம் உள்ளிட்ட பல அதிமுக திட்டங்களை திமுக முடக்கி உள்ளது.