Captain Miller Update: குற்றாலத்தில் முடிந்த முதற்கட்ட படப்பிடிப்பு.. தனுஷூடன் இணையும் கன்னட நடிகர்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிரபல கன்னட நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிரபல கன்னட நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Continues below advertisement

பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக தனுஷ் - சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணி “கேப்டன் மில்லர்” என்ற படத்தில் இணைந்துள்ளது. ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் படமானது 2023 ஆம் ஆண்டு மே மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

                                           

இதனிடையே கேப்டன் மில்லர் படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. தொடர்ந்து நிவேதிதா சதிஷ்,ஜான் கொக்கன் உள்ளிட்டோர் படத்தில் இணைவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே  படத்தின் பூஜை நடந்தது. இந்த நிகழ்வில் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஷ்வரன், ஜிவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

                                               

அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில்  படிப்பிடிப்பிற்காக தென்காசி சென்ற படக்குழு அங்கு முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் இந்தப்படத்தில் கன்னடத்தில் பிரபல நடிகராக வலம் வரும் சிவராஜ் குமார் இந்தப்படத்தில் இணைய இருப்பதாக  தகவல் வெளியாகி இருக்கிறது. சிவராஜ் குமார் ரஜினி நடிப்பில் உருவாகும்   ‘ஜெயிலர்’ படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது  குறிப்பிடத்தக்கது. 

 

முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம் படம் வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் நடிகைகள் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நடிகர்கள் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் இந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement