பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘கோல்டன் விசா’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம் என அழைக்கப்படும் துபாய் அரசு. அந்த வகையில் இந்தியாவில் விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், கலைத்துறையை சேர்ந்த பலருக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்ஸ் என அழைக்கப்படும் மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி கவுரவப்படுத்தியிருந்தது துபாய் அரசு. அதற்கு உதவியாக இருந்த பிரபல லூலூ நிறுவனத்தின் தலைவர் யூடுஃப் அலிக்கு ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்திருந்தனர். மம்முட்டியும் மோகன்லாலும். மலையாள திரையுலகில் கோல்டன் விசாக்களை அதுவரையில் யாரும் பெற்றிருக்கவில்லை. இவர்களை தொடர்ந்து மம்முட்டியி்ன் மகனும் , இளம் நடிகருமான துல்கர் சல்மானுக்கு துபாய் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது துபாய் அரசு.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள துல்கர் சல்மான் “திரு யூசுப் அலி முன்னிலையில் மாண்புமிகு சவுத் அப்துல் அஜீஸிடமிருந்து கோல்டன் விசா பெறும் பாக்கியமும் மரியாதையும் கிடைத்தது.திரைப்படம் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்கும் அபுதாபி அரசின் அனைத்து எதிர்கால திட்டங்களும் கேட்பது அருமையாக இருந்தது.அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிப்புகள், படப்பிடிப்பு மற்றும் அதிக நேரம் செலவழிக்க காத்திருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் திறமையானவர்களையும் ஈர்க்கும் பொருட்டு ஐக்கிய அமீரகத்தால் கொண்டுவரப்பட்டதுதான் கோல்டன் விசா. 10 வருடம் ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசாதான் இந்தக் கோல்டன் விசா. இதனை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டு குடிமக்கள் போலவே கருதப்படுவார்கள் . பொதுவாக விசா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் கோல்டன் விசா 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் மட்டுமே போதுமானது ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019-ஆம் ஆண்டு கோல்டன் விசாவை அறிமுகம் செய்தது.ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசாவை அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் சிறப்பான நடிகர்கள், நடிகைகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் அமீரகத்தில் தங்கி பணியாற்றும் மருத்துவர்களும் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.இவ்வாறு உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் விசா விருது மோகன் லால், மம்மூட்டியை கிடைத்தை தொடர்ந்து துல்கர் சல்மானுக்கும் கிடைத்திருப்பது மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.