தனுஷ்


ஒரு பக்கம் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிஸ்யாக இருக்கும் தனுஷ் இன்னொரு பக்கம் அடுத்தடுத்த படங்களையும் இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு ராயன் திரைப்படத்தில் இயக்கி  நடித்தார் தனுஷ். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 


ஏ செண்டர் ரசிகர்களை கவர்ந்த NEEK


டிராகன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால் தனுஷின் படம் சுமாராக தான் ஓடியது என பரவலான கருத்து இருந்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்சயன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியபோது இப்படி கூறினார் " நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மொத்த பட்ஜெட் 15 கோடி தான் இருக்கும். இந்த பணத்தை சேட்டலைட் மற்றும் ஓடிடி விற்பனையிலேயே தனுஷ் எடுத்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் படம் ஏ செண்டர் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்கத்தின் மூலம் வரும் வசூல் எல்லாம் தனுஷூக்கு போனஸ் தான்" என அவர் கூறினார். இந்த தலைமுறையினரை கவரும் வகையில் நீக் படம் இருந்ததால் நகரங்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


பி செண்டரை குறிவைத்து வெளியாகும் இட்லி கடை


அடுத்தபடியாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் வெளியாக இருக்கிறது. நித்யா மேனன். அருண் விஜய் , ராஜ்கிரன் ஆகியோ நடித்து கிராமிய கதைக்களத்தை படமாக எடுத்துள்ளார் தனுஷ். கிராமத்தை மையப்படுத்தி கதை என்பதால் இந்த படத்திற்கு பி மற்றும் சி செண்டர் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தனுஷின் மாஸ்டர் பிளான்


நீக் , மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் என்றாலும் இரண்டு படங்களும் குறிப்பிட்ட ரசிகர்களை மனதில் வைத்தே தனுஷ் இந்த படங்களை எடுத்துள்ளார். வெளியில் பார்க்க பெரிய வெற்றியாக இல்லாவிட்டாலும் தனுஷின் மாஸ்டர் பிளான் அவர் திட்டமிட்டது போலதான் நடந்து வருகிறது 


குபேரா


சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , ராஷ்மிகா மந்தனா , நாகர்ஜூனா ஆகியோர் நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தேவிஶ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் மூலம் தனுஷ் நேரடியாக தெலுங்கு திரையுலகில் களமிறங்க இருக்கிறார்.