பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவும் (Ananya Pande), நடிகர் ஆதித்யா ராஜ் கபூரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் ப்ரேக் அப் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இளம் நடிகை அனன்யா பாண்டே


பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் நடிகை அனன்யா பாண்டே. இயக்குநர் கரண் ஜோகரின் ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2' படம் மூலம் 2019ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான அனன்யா பாண்டே, குறுகிய காலத்திலேயே ட்ரெண்டிங் நாயகியாக மாறி கவனமீர்க்கத் தொடங்கினார். வாரிசு நடிகை, அப்பா மூலம் வந்த சினிமா வாய்ப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகள் நெபோடிசம் பிரச்னையால் அவர் மீது முன்வைக்கப்பட்டாலும், மற்றொருபுறம் அனன்யா பாண்டேவுக்கு ரசிகர்களும் பெருகினர்.


முன்னதாக விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த லைகர் திரைப்படம் தோல்வியைத் தழுவினாலும், இந்தி தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடமும் இப்படத்தின் மூலம் அனன்யா பாண்டே வரவேற்பு பெற்றார்.


13 வயது மூத்த நடிகருடன் காதல்




இதனிடையே ஆஷிக்கி 2 திரைப்படத்தில் நடித்த பாலிவுட்டின் பிரபல நடிகரான ஆதித்யா ராய் கபூரை அவர் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. இவர்கள் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்காவிட்டாலும், பொது இடங்களில் ஒன்றாக இருவரும் வலம் வரத் தொடங்கி காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினர்.


25 வயது அனன்யா பாண்டே, தன்னை விட 13 வயது மூத்தவரான ஆதித்யா ராய் கபூர் உடன் காதலில் விழுந்தது பேசுபொருளான நிலையில், இந்த ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் பறவைகளாக வலம் வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் ப்ரேக் அப் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


முன்னாள் காதலியுடன் பேட்ச் அப் செய்த நடிகர்?




மேலும், பிரபல நடிகையும் தனது முன்னாள் காதலியுமான ஷ்ரத்தா கபூரை ஆதித்யா ராய் கபூர் மீண்டும் காதலிப்பதாகவும், அவரது வீட்டுக்கு ஆதித்யா ராய் கபூர் வருகை தந்ததாகவும் தகவல்கள் பாலிவுட் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றன. 


ஆஷிக்கி 2 திரைப்படம் தொடங்கி ஓகே கண்மணி படத்தின் ரீமேக்கான ஓகே ஜானு திரைப்படம் வரை, ஆதித்யா ராய் கபூர் - ஷ்ரத்தா கபூர் ஜோடி ஏற்கெனவே பாலிவுட் தாண்டியும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள நிலையில், இந்தத் தகவல் இவர்களது ரசிகர்கள் மத்தியில் ஒருபுறம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Dragon: பிரதீப் ரங்கநாதன் ஹீரோ.. ஓ மை கடவுளே பட இயக்குநரின் அடுத்த படம்: கலக்கல் அப்டேட்!


Trisha: சாய் பாபா தரிசனமும் பிறந்தநாள் கொண்டாட்டமும்.. புகைப்படங்கள் பகிர்ந்து த்ரிஷா மகிழ்ச்சி!