நடிகர் ரஜினி குறித்து இயக்குநர் ஷங்கரின் மகளான நடிகை அதிதி பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடிக்கின்றர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. 


விஜய்க்கு அம்மாவாக நடிக்காதது ஏன்? விளக்கமாக கூறிய நடிகை சரண்யா!


இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் விருமன் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கார்த்தி, அதிதி ஊடகங்களில் விருமன் படத்தின் புரொமோஷன்களில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் ஒரு பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அதிதியிடம் இயக்குநர் ஷங்கரின் படங்களின் புகைப்படத்தை பகிர்ந்து ஏதாவது நினைவலைகள் இருந்தால் சொல்லாம் என கேட்கிறார். 






அதற்கு அதிதி ரஜினி, ஸ்ரேயா நடித்து 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தை தேர்வு செய்கிறார். பின்னர் ஒருமுறை ரஜினி பிறந்தநாள் அன்று அப்பா (ஷங்கர்) அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்து வந்தார். ரஜினி சாரின் குரல் கேட்டதும் நான் போனை வாங்கி சார் எனக்கு 2 வசனம் பேசி காட்டுறீங்களா என கேட்டேன். ரஜினி சாரும் சரி என்ன வசனம் எனக் கேட்டார். 


உடனே சிவாஜி படத்தில் காரில் செல்லும் போது பேசுவீங்களே அந்த டயலாக் என கூறி நான் ஹலோ யாரு என கேட்க, ரஜினி சார் ஆ...மோரு என தெரிவித்தார். அவரின் பேச்சை நேரடியாக கேட்டதும் தலைவரே என ஆர்ப்பரித்தேன் என அதிதி கூறியுள்ளார். மேலும் இன்னும் 2 சொல்றீங்களா என நான் கேட்டேன். பின் அதே படத்தில் வரும் கோனே...என கேட்க ரஜினியோ பாஸ்ஸூடா கேனை.... என சொன்னதை தன்னால் மறக்கவே முடியாது என அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில் அதிதி ரஜினியுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண