காதல், என்ற வார்த்தை மிகவும் எளிமையானதாகத் தோன்றுகிறது. ஆனால் ஒரு உறவு பல்வேறு பரிமாணங்களை எட்டும்போது அது கடினமானதாகிறது. காதல் என்பது 'ஐ லவ் யூ' என்பதை வெளிப்படுத்துவதும் சொல்வதும் மட்டுமல்ல, அது அதை விட அதிகம். உங்கள் பார்ட்னர் உங்களுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர பல வழிகள் உள்ளன. அது உடல் ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ இருக்கலாம். சமீபத்தில், ஒரு ஆய்வில், உங்கள் பார்ட்னருக்கு அருகில் தூங்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது எனத் தெரியவந்துள்ளது.


ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டியின் அதிகாரப்பூர்வ இதழான ஸ்லீப்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தங்கள் பார்ட்னர்களுடன் தூங்குபவர்கள் வலுவான உறவைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர், "குறைந்த மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் தணிக்கவும் சமூகத்தின் ஆதரவுடன் செயல்படவும் இது உதவுகிறது." என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.




தென்கிழக்கு பென்சில்வேனியாவைச் சேர்ந்த 1,000 பெரியவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒரே படுக்கையில் தூங்கும் பார்ட்னர்களின், தூக்கத்தின் தரம் மற்றும் தூக்க நோய்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறிய ஆராய்ச்சி செய்யப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறையின் இளங்கலை ஆராய்ச்சியாளரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான பிராண்டன் ஃபியூன்டெஸின் கூற்றுப்படி, “ஒரு காதல் துணை அல்லது இணையருடன் தூங்குவது தூக்கத்தில் மூச்சுத்திணறல், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளைக் களைந்து தூக்க ஆரோக்கியத்தில் பெரும் நன்மைகளைக் காட்டுகிறது. தூக்கத்தின் தரத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றமும் காணப்படுகிறது."


ஆய்வை நடத்த, அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, தூக்கம் மற்றும் சுகாதார செயல்பாடு, உணவுமுறை, சுற்றுச்சூழல் மற்றும் சமூகமயமாக்கல் அமைப்பின்ஆய்வின் தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்தனர்.
 குறைவான கடுமையான தூக்கமின்மை மற்றும் சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெரும்பாலான இரவுகளில் தங்கள் காதல் துணையுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் இரவில் எந்த தொந்தரவும் இல்லாமல் அதிக நேரம் தூங்குகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, சில பங்கேற்பாளர்கள் தங்கள் பார்ட்னருடன் தூங்கும்போது, ​​மற்ற இரவுகளை விட வேகமாக தூங்கிவிட்டதாகவும், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மாறாக, தங்கள் கூட்டாளிகளுக்குப் பதிலாக தங்கள் குழந்தைகளுடன் தூங்குபவர்கள் கடுமையான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூக்கத்தில் மூச்சுத்திணறல், தொந்தரவு மற்றும் சீரற்ற தூக்கம் போன்ற ஆபத்துகள் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


மூத்த ஆய்வு ஆசிரியர் டாக்டர் மைக்கேல் கிராண்ட்னர், அரிசோனா பல்கலைக்கழகத்தின் தூக்கம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டத்தின் இயக்குனர், "மிக சில ஆய்வுகள் இதை ஆராய்கின்றன, ஆனால் எங்கள் கண்டுபிடிப்புகள் நாம் தனியாகவோ அல்லது ஒரு பார்ட்னர், குடும்ப உறுப்பினர் அல்லது செல்லப்பிராணியுடன் தூங்கலாம் என்றும் அது நமது தூக்க ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறுகின்றன"


ஒரு பார்ட்னர் மற்றும் குழந்தைகளுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர, ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது அம்சத்தையும் ஆராய்ந்தனர். அதாவது தனியாக தூங்குவது மற்றும் தனியாக தூங்குபவர்கள் "அதிக மனச்சோர்வு மார்க்கர்களை, குறைந்த சமூக ஆதரவு, மோசமான வாழ்க்கை மற்றும் உறவு திருப்தியின்மை ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்" என்பதை வெளிப்படுத்தினர்.