ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கவர்ந்தவர் நடிகை அதிதி ராவ். 2007ம் ஆண்டு வெளியான "சிருங்காரம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான "காற்று வெளியிடை" படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.
சிறப்பான நடிப்பு :
"சிருங்காரம்" திரைப்படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்தது சினிமா விமர்சர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிதி ராவ் தொடர்ந்து சைக்கோ, துக்ளக் தர்பார், ஹே.. சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அதிதியின் குருவான இயக்குனர் மணிரத்னத்தின் மற்றுமொரு படைப்பான " செக்க சிவந்த வானம்" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் வந்து போனாலும் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நின்றது.
மணிரத்தினத்தின் நாயகியாக இருக்க ஆசை:
ஒரு முறை நடிகை அதிதி ராவ் இடம் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்ட போது அவர் கூறுகையில் மணி சாரின் படத்தில் நடிப்பது எனது வாழ் நாள் கனவாக இருந்தது. அந்த வாய்ப்பு எனக்கு இருமுறை கிடைத்ததை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு இயக்குனரிடம் இருந்து நாம் என்ன உள்வாங்கிக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம். அதனோடு உள்வாங்கியதை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது மிக மிக முக்கியம். அது தானாக வரவேண்டும். யாராலும் அதை மறைக்க முடியாது. நான் எப்போதுமே அவரின் கதாநாயகியாக இருக்கவே மிகவும் ஆசைப்படுகிறேன்" என கூறியிருந்தார்.
சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு:
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஓமுங் குமார், சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் மலையாளம், மராத்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றியவர் அதிதி ராவ். மேலும் 2018ம் ஆண்டு வெளியான வரலாறு சார்ந்த "பத்மாவத்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அலாவுதீன் கில்சியின் மனைவியாக நடித்ததன் மூலம் பாராட்டை பெற்றார்.
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் அதிதி:
சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அதிதி ராவ் பத்திரிகையாளர்களிடன் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதில் மிகுந்த சந்தோஷம். நாம் இந்த படத்திற்காக ம் இக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மணி சார் மற்றும் ரஹ்மான் சார் எனும் இந்த இரண்டு லெஜெண்ட்டுகளுடன் நான் இருமுறை பணியாற்றியதை எண்ணி பெருமை படுகிறேன் என்றார். பாரம்பரியமான பிங்க் புடவையில் தேவதை போல அழகா மின்னினார் அதிதி ராவ்.
வீக்எண்டு போஸ்ட் :
தனது வார இறுதி நாட்களை மிகவும் சந்தோஷமாக தனது வீட்டில் மேஜிக் கார்பெட்டோடு அனுபவிப்பதாக ஒரு புதிய போஸ்ட் ஒன்றை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ போஸ்டிற்கு அதிதி ராவ் ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் குவித்து வருகிறார்கள்.