அதிதி ராவ் ஹைதாரி - சித்தார்த் இருவரும் இணைந்திருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டோலிவுட்டில் ‘மகா சமுத்திரம்’ படத்தில் நடித்தது முதல் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி இருவரும் காதலில் திளைத்து வருவதாகத் தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தொடர்ந்து பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு இவர்கள் இருவரும் வந்த நிலையில், இணையத்திலும் இருவரும் மாறி மாறி காதல் மழை பொழிந்து வந்தனர். ஆனால் இருவருமே இது குறித்து தற்போது வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அதிதி ராவ் ஹைதாரி - சித்தார்த் தம்பதி இருவரும் ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.
அதிதியின் உறவுக்காரரும் நடிகை மற்றும் அரசியல்வாதியுமான பினா இவர்களது புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இவை இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
முன்னதாக தங்கள் உறவு குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சித்தார்த் "நான் என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், அது தி ட்ரூமன் ஷோ திரைப்படம் போல் இல்லாமல் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு ரியாலிட்டி ஷோ கதாபாத்திரம் அல்ல, நான் என் வாழ்க்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பு, 100 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வாழ்ந்திருப்பேனோ அப்படியே வாழ விரும்புகிறேன்.
அனைவரின் கையிலும் மொபைல் போன் மற்றும் கேமரா இருப்பதால், நான் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமல்ல.என் வாழ்க்கையில் என்ன நடக்குமோ அது நடக்கும்” எனப் பேசியுள்ளார்.
முன்னதாக அதிதி - சித்தார்த் இருவரும் மால டம் டம் பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட ரீல்ஸ் இணையத்தில் வைரலானது. சித்தார்த் நடிப்பில் வரும் ஜூன் 9ஆம் தேதி டக்கர் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள இந்தப் படத்தில் திவ்யான்ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். அதிதி ராவ் ஹைதாரி முன்னதாக ஜூபிலி இணைய தொடரில் நடித்திருந்தார். தமிழில் ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்திருந்தார். விரைவில் இவர் நடிப்பில் காந்தி டாக்ஸ் எனும் பேசும் படமும், லயனஸ் எனும் ஆங்கிலப் படமும் வெளியாக உள்ளது.