சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (CSIR- Council of Scientific & Industrial Research) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.
சி.எஸ்.ஐ.ஆர். தகுதித் தேர்வு அறிவிப்பு
வேதியியல், புவியியல், சுற்றுச்சூழல், அறிவியல், இயற்பியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கான தகுதித் தேர்வினை சி.எஸ்.ஐ.ஆர். பிரிவின் மூலம் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்தது. கடந்தாண்டு டிசம்பர், 2022 மற்றும் ஜூன்,2023 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எப்போது?
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதும், ஜூன் மாதம் 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பில் மாற்றம் இல்லை என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. ஜூன் 6ஆம் தேதி லைஃப் சைன்ஸ் தேர்வு இரண்டு ஷிஃப்டுகளில் நடைபெற உள்ளது. அதேபோல 7ஆம் தேதி வேதியியல் அறிவியல், கணித அறிவியல் ஆகிய தேர்வுகள் முறையே காலை, மதிய ஷிஃப்டுகளில் நடைபெற உள்ளன.
அதேபோல ஜூன் 8ஆம் தேதி இயற்பியல் அறிவியல் மற்றும் பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் பாடங்கள் நடக்க உள்ளன.
இந்த நிலையில், நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வர்கள் 011 40759000, 011-69227700 ஆகிய எண்களைபுகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
இ-மெயில் முகவரி - csirnet@nta.ac.in
தேர்வர்கள் https://nta.ac.in/Download/Notice/Notice_20230603210036.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.