தமிழ் ஆந்தாலஜி படப்பிடிப்புக்காக சேலம் ஜல்லூத்துப்பட்டி கிராமத்துக்கு சென்றிருந்த அதிதி பாலன், அங்குள்ள பெண்கள், வாழ்க்கை என தனது அனுபவங்களைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.


அதிதி பின்னிய ஒயர் கூடை


"ஆந்தாலஜி படப்பிடிப்புக்காக சேலம் மாவட்டம் ஜல்லூத்துப்பட்டிக்கு போயிருந்தேன். அங்கு பெண்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருக்கும் பெண்களுடன் காலை நேரத்தில் அரளிப்பூ பறிக்க போவேன்.


அவர்கள் பூக்கள் பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். அந்தப் பெண்கள் அவ்வளவு மனவலிமை வாய்ந்தவர்கள்.


குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர்களின் கணவர்களைப் பற்றி கேட்டபோது, நாலு சாத்து சாத்துனா சரியாப்போகும் என சிரித்துக்கொண்டே சொல்வார்கள். அவர்களிடம் ஒயர் கூடை பின்ன கற்றுக்கொண்டேன். ஒயர் கூடை பின்னுவது அமைதியான விஷயம். அமைதி தரும் விஷயம். போகும் இடங்களில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். நான் பின்னிய கூடைகளையும் அவர்களிடம் கொடுத்து ஒருநாள் விற்பனை செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார் அதிதி பாலன்.