Adipurush Release LIVE: 600 கோடி பட்ஜெட்டில் இப்படியா...ரசிகர்கள் அதிருப்தி!
Adipurush Movie Release LIVE Updates: பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் உடன் தேவ்தத்தா நாக் ஹனுமனாக நடித்துள்ளார்.
இராவணனாக சைஃப் அலி கான் தோன்றும் விஎஃபெக்ஸ் காட்சிகள் சரியில்லை என்றும், 600 கோடி பட்ஜெட்டில் ஆதிபுருஷ் படம் எடுக்கப்பட்டதாக நம்ப முடியவில்லை எனவும் படம் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆதிபுருஷ் படத்தில் ஸ்ரீராமராக பிரபாஸ் ஈர்க்கவில்லை, அவரது ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் சரியில்லை என்றும் பிரபல பாலிவுட் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் சைஃப் அலி கான் ராவணனாக வீணை வாசித்தபடி குகை ஒன்றில் அறிமுகமாகும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆதிபுருஷ் திரையரங்குகளில் கடவுள் ஹனுமனுக்கு சீட்டுகள் ஒதுக்கப்பட்டு ஹனுமன் சிலைகளை வைத்து ரசிகர்கள் வழிபடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
ஆதிபுருஷ் திரைப்படத்துக்கு நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்த நபரை, ஹைதராபாத், பிரசாத் ஐமேக்ஸ் திரையரங்கில் பிரபாஸ் ரசிகர்கள் ஒன்றிணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கம் ஒன்றுக்கு குரங்குகள் வருகை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹனுமன் திரையரங்குக்கு வருகை தந்து ஆதிபுருஷ் படக்குழுவினருக்கு அருள் புரிந்ததாகக் கூறி ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆதி புருஷ் படம் படம் இன்று காலை திரையரங்குகளில் ரிலீசாகி உள்ள நிலையில் பிரபாஸ் ரசிகர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் மட்டும்தான் காலை காட்சி திரையிடப்படவுள்ளன. முக்கால் வாசி திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுப்போகவில்லை.
திருப்பதியில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பிரபாஸ், அவரது கல்யாணம் திருப்பதியில்தான் நடக்கும் என தெரிவித்தார்.
பாகுபலி படத்தின் மூலம் பலரின் மனதை கவர்ந்த பிரபாஸின் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
டெல்லியில் ஒரு சில திரையரங்குகளில் 2000 ரூபாய்க்கு டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறதாக தகவல் பரவி வருகிறாது.
டெல்லியில் ஆதிபுருஷ் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்தவுடன், அனைத்து டிக்கெட்டுகளும் மடமடவென்று விற்று தீர்ந்தது.
முன்னதாக இயக்குநர் ஓம் ராவத், “ராமயணம் எப்போதெல்லாம் அரங்கேற்றப்படுகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்க்க அனுமன் வருவார் என என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார். எனவே ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் நான் கோரிக்கை வைக்கிறேன்.
உலகத்தில் எங்கெல்லாம் ‘ஆதிபுருஷ்’ படத்தின் காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறதோ அங்கெல்லாம் ராமாயணத்தைக் காண வரும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்” என பேசினார்.
முதன் முதலில் வெளியான ஆதிபுருஷின் டீசரில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள், பொம்மை படம் போல் உள்ளதாக நெட்டிசன்கள் ட்ரால் செய்தனர். பின்னர், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை கொண்ட மற்றொரு டீசர் வெளியிடப்பட்டது.
500 கோடி செலவில் உருவான இப்படம், முதல் நாளில் 50 முதல் 60 வரை வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பல முறை மெகா தொடர்களாகவும், படங்களாகவும் எடுக்கப்பட்ட ராமாயண இதிகாசத்தை அடிப்படையாக கொண்டு ஆதிபுருஷ் படமாக்கப்பட்டுள்ளது.
பான் இந்திய ஸ்டார் பிரபாஸ், பாலிவுட் அழகி கிருத்தி சனோன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படம் நாளை வெளியாகவுள்ளது.
Background
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் நடிப்பில் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. நாளை (ஜூன்.16) இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ஆதிபுருஷ் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இணையத்தில் ட்ரோல்கள், சர்ச்சைகள் எனக் களைக்கட்டி கலவையான விமர்சனங்களைப் பெற்று ட்ரெண்டானது. இந்நிலையில் சுமார் 500 கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு மேலும் 100 கோடிகள் ஒதுக்கி, படக்குழு முழுவீச்சில் படப்பணிகளை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி மீண்டும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் முன்னதாக திருப்பதியில் நடைபெற்ற ஆதிபுருஷ் ப்ரீ ரிலீஸ் விழாவில் இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத், கடவுள் ஹனுமனுக்கு தியேட்டர்தோறும் ஒரு இருக்கை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது, முழுமையான ட்ரோல் மெட்டீரியலாக மாறி இணையத்தை ஆக்கிரமித்தது.
தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களுக்கு ஓம் ராவத் கோரிக்கை விடுத்ததை அடுத்து படக்குழுவும் இது தொடர்பான அறிவிப்பைப் பகிர்ந்தது. இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் ஆதிபுருஷ் படத்தின் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது.
இதேபோல் நடிகர்கள் ராம்சரண், காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' படங்களில் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் ஆகியோரும் இதேபோன்று அறிவித்தனர். இந்நிலையில் படத்தை ஓட வைக்க ஆதிபுருஷ் படக்குழு தொடர்ந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டில் இப்படி டிக்கெட்டுகள் வாங்கித் தர ஒரு ஸ்டார் இல்லையே என்றும் புலம்பி நெட்டிசன்கள் மேலும் இப்படத்தை ட்ரோல் கண்டெண்டாக மாற்றினர்.
மறுபுறம் இப்படத்துக்கு மகாராஷ்டிராவின் பிரபல இரட்டை இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
நடிகர் தேவ்தத்தா நாக் ஹனுமனாக நடித்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இவர்கள் தவிர சன்னி சிங், சோனால் சௌஹான் உள்ளிட்ட நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னதாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் பெற்றுள்ளது.
முன்னதாக 1992ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய திரைப்படமான ‘ராமாயணம்: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ்’ படத்தால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் ஓம் ராவத், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராமாயணம் எடுக்க விரும்பி இப்படத்தை எடுத்துள்ளார்.
நடிகர் பிரபாஸூக்கு முன்னதாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியைத் தழுவிய நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெறுமா என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -