Adipurush Box Office Collection: இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங் ,சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டி-சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் கடந்த

  ஜூன் மாதம் 16 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியது.


டீஸர் வெளியான நாளில் இருந்தே ஆதிபுருஷ் திரைப்படம் இணையத்தில் ட்ரோல்  செய்யப்பட்டு வந்தது. மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள்  ரசிகர்களுக்கு படம் மீதான ஒவ்வாமையை உருவாகியிருந்தன. படுதோல்வி அடையும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் பாகுபலி பிரபாஸின் மீது மொத்த நம்பிக்கையையும் வைத்து படத்தை வெளியிடப்பட்டது ஆதிபுருஷ்.


அசத்திய முதல் நாள் வசூல்


 அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதிலும் சுமார் 86. 75 கோடி வசூல் செய்திருந்தது..அதே நேரத்தில் உலகம் முழுவதும்  140  கோடி வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வத் தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது .


 அதே நேரத்தில் தமிழ், மலையாளம் ,  ஆகிய மொழிகளில் ஒப்பீட்டளவில் சற்று சுமாரான ஓப்பனிங்கே  அமைந்தது.


 நம்பலாமா நம்பக்கூடாதா


ஆதிபுருஷ் திரைப்படம் முதல்  நான்கு நாட்களில் மட்டுமெ 375  கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது. ஆனால் இந்தத் தகவல் மிகைப்படுத்தப்பட்டது என விமர்சகர்கள் கூறுகிறார்கள். 


பிரபாஸை கைவிடாத தெலுங்கு ரசிகர்கள்


ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட  திரையரங்குகளில்  நல்ல ஓப்பனிங் கிடைத்தது.


 நிஜாம் பகுதிகள் என்று வரையறுக்கப் படும் தெலங்கானா , கர்னாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சில மாவட்டங்களில் முதல் நாளில் 50 கோடி வசூல் செய்ததாகவும். ஆந்திராவில் 55 கோடி வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ஆதிபுருஷ் படத்தை நிராகரித்த தமிழ் மற்றும் கேரள ரசிகர்கள்


அதே நேரத்தில் தமிழ், மலையாளம் ,  ஆகிய மொழிகளில் ஒப்பீட்டளவில் சற்று சுமாரான ஓப்பனிங்கே  அமைந்தது. முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் வெறும் 4.2 கோடியும் கர்னாடகாவில் 18 கோடியும் கேரள மாநிலத்தில் 1.5 கோடி வசூல் செய்தது ஆதிபுருஷ்.


முதல் நாளைவிட 90 சதவீதம் குறைவான வசூல்


படத்திற்கு அருகி வந்த கூட்டத்தைத் தொடர்ந்து கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களில் படத்தின் டிக்கெட் விலை குறைக்கப்பட்டது.  இந்நிலையில் முதல்  நாள் வசூலைக்காட்டிலும் 90 சதவீதம் படத்தின் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழாவது நாளில் அதிபுருஷ் இந்தியா முழவதும் வெறும் 4.85 கோடி வசூலுக்கு சரிந்துள்ளது. 


என்ன காரணம்


” டப்பிங் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ராஜமெளலி இயக்கிய  பாகுபலி திரைப்படத்தை அவர்கள் கொண்டாடினார்கள். ஆனால் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் அவர்களுக்கு புதிட்யவர். படம் குறைந்த வசூலை ஈட்டியதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஓருவர்.


 அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றிப்பெற்றதற்கு  முக்கியமான காரணம் ஒரு குறிப்பிட்ட மதத்தை அது முன்நிறுத்துவதனாலும் இந்துத்துவச் சார்புடையவர்களே ஆதிபுருஷ் திரைபடத்திற்கு பெரும் ஆதரவு வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இத்தகைய மதச்சார்புடையவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணமாக படம் சுமாரான ஒப்பனிங்கை பெற்றதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் மற்றொருவர்.


 முதல் இரண்டு நாட்கள் அதிரடியாக  எகிரிய வசூல் அடுத்தடுத்த நாட்களில் கனிசமாக கூறைந்துள்ளது படத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சங்களின் தாக்கத்தை காட்டுகின்றன. எத்தனை நாளைக்குத்தான் பிரமாண்டத்தை மட்டுமே வைத்து ஓட்ட முடியும்.