விழுப்புரம் : மரக்காணம் அருகே சாலை ஓரம் பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம். நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்துள்ளது, இந்த பேருந்தை கும்பகோணம் பகுதியை சேர்ந்த நடராஜ் வயது (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதில் நாகப்பட்டினம் வேதாரணியம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 27 பயணிகள் வந்துள்ளனர்.


இந்த பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே தாழங்காடு என்ற இடத்தில் சென்றபொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி ஆழமுள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அப்போது அந்த பேருந்தில் தூக்கத்தில் வந்த பயணிகள் செய்வது அறியாமல் தங்கள் உயிரை காப்பாற்றும்படி சத்தம் போட்டு உள்ளனர்.


பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி உள்ளனர் மேலும் இந்த சம்பவம் குறித்து மரக்காணம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர் தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் உடனடியாக சம்பவத்திற்கு சென்று விபத்தில் சிக்கி அவர்களை பொதுமக்களின் உதவியுடன் பேருந்து உள்ளே இருந்து வெளியில் அழைத்து வந்துள்ளனர்.


இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் ஸ்ரீராம் வயது (57) மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த சந்தியா வயசு (29) வேதாரணியம் பகுதியை சேர்ந்த பாபா செல்வம் வயது (35) நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கார்த்திக் வயது (25) சாதிக் வயது (40 )ராஜேந்திரன் வயது (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை போலீசார் மரக்காணம் அரசு பொது மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு மருத்துவர்கள் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர