1975 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான மஞ்சள் முகமே வருக என்ற படத்தில் விஜயகுமார் ஜோடியாக அறிமுகமானவர் சத்தியப்பிரியா. இவர் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நாயகியாகவும் , 300 க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.  இவர் எஸ்.எஸ்.முகுந்தா என்னும் தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் . தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் சத்தியப்பிரியா.




“எனக்கும் எனது கணவருக்கும் திருமணமான பிறகு 10 மாதத்திலேயே எனது மகன் பிறந்துவிட்டார். 5 வருடம் கழித்து பெண் பிறந்தார். அந்த சமயங்களில் நான் நடிக்க மாட்டேன் என கூறவில்லை . ஆனால் ஏனோ சினிமாவில் இருந்து விலகியே இருந்தேன் .எனக்கு வீட்டில் bore அடிக்க ஆரமித்துவிட்டது.  அதன் பிறகு எனக்கு தெரிந்த ஆந்திர அமைச்சர் மூலமாக வேலை செய்ய கேட்டிருந்தேன் . அவருக்கு அப்போல்லோ மருத்துவமனை பி.சி.ரெட்டி நெருங்கிய நண்பர். அவர் எனக்கு அப்பல்லோ மருத்துவமனையில் வார்ட் செக்யூரிட்டியாக வேலை வாங்கி கொடுத்தார். 6 மாதங்கள் வார்ட் செக்யூரிட்டியாக வேலை செய்தேன். அந்த சமயத்தில்தான் என் கணவருக்கு கேன்சர் அப்படினு தெரிய வந்தது.அதன் பிறகு வேலையை விட்டுட்டு என் கணவரை பார்த்துக்கிட்டேன்.


அதன் பிறகு குடும்ப சூழல் , பி.ஆர்.ஓ கிட்ட சொல்லி மீண்டும் நடிக்க ஆசை இருப்பதாக சொன்னேன். அந்த சமயத்துலதான் பார்த்திபன் சார் புதிய பாதை படத்துல முக்கியமான கதாபாத்திரத்திற்கு ஆள் கேட்டிருந்தார். அந்த சமயத்துல அவரை மீட் பண்ணேன் . அவர் என்னுடைய ஃபேன் அப்படினு சொல்லி நல்லா பேசினார். கதையை சொன்னதும் எனக்கு ரீ-எண்ட்ரியில இப்படியான ரோல்ல நடிக்கனுமான்னு யோசிச்சேன் . அவர் இந்த கதாபாத்திரம் நல்லா பேசப்படும்னு என்னை சமாதானம் செய்தார். அந்த படத்தில் நடித்த பிறகு எனக்கு 10 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.அதற்கு நான் பார்த்திபன் சாருக்கு நன்றி சொல்லனும்.என் கணவருக்கு சிகிச்சை அளித்த பிறகு  கேன்சர் சரியாயிடுச்சு. ஆனால் முகமெல்லாம் கொஞ்சம் மாறிடுச்சு. அவர் விஷ்னு வர்தன் போல இருப்பாருனு சொல்லுவாங்க.அதனால அவருக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை வந்துடுச்சு.அதனால அவர் உடம்பை பார்த்துக்காம போயிட்டாரு. அதனால உயர் ரத்த அழுத்தம் வந்து , ஸ்டோக்னால இறந்துட்டாரு. அந்த சமயத்துல நான் என் குழந்தைகளுக்காக மனம் தளராமல் , துணிவோட வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. கணவர் இருந்த சமயத்துல எனக்கு ரொம்ப பக்கபலமா இருந்தாரு. நான் வேலை செய்ய போகும் பொழுதெல்லாம் குழந்தைகளை நல்லா பார்த்துக்கிட்டாரு “ என தனது தனிப்பட்ட வாழ்க்கையை பகிர்ந்திருக்கிறார் சத்தியப்பிரியா.