பெண்கள் மீதான பாலியல் சீண்டலை கதையாக கொண்டு உருவாகி இருக்கும் மயிலாஞ்சி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் ராஜன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோபோ சங்கர் பெண்களை பெற்ற அப்பாக்குகளுக்கு தான் அவர்களது பாதுகாப்பு குறித்த வலி தெரியும் என உருக்கமாக பேசியுள்ளார்.


நிகழ்வில் பேசிய ரோபோ சங்கர், “பெண்ணியம் பேசிய பெரியார் மண்ணில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்ணிற்கு சுதந்திரம் இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்வி குறி தான். சென்னையில் மனநல பாதிக்கப்பட்ட குழந்தையை 75 வயதான கிழவன் உட்பட 6 பேர் 7 மாதமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அது எவ்வளவு பெரிய கொடுமை. மணிப்பூரில் நடந்தால் அது ஒரு செய்தியாக கடந்து போகிறது. இப்படி பெண்களின் மீதான பாலியல் வன்முறையை பேசும் மயிலாஞ்சி படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். கிராமங்களில் பள்ளிக்கு சென்ற பிள்ளைகள் வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் காலம் வந்துவிட்டது. 6 மாதங்கள் ஒன்றாக இருந்து விட்டு பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்கின்றனர். உலகத்திலேயே ஆண்களை விட அதிகமான வலியை தாங்கும் சக்தி பெண்களிடம் உண்டு. பெண்களை போற்றும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்க வேண்டும். பெண்களுக்கு முழு சுதந்திரமும், உரிமையும் தர வேண்டும்.


ஒவ்வொரு மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே அந்த வலி தெரியும். பசங்கள் அவுத்த விட்ட சேவல் போல. பசங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. குழந்தைகள் பெற்றோரிடம் எல்லாவற்றையும் ஷேர் செய்ய வேண்டும். குழந்தைகள் செல்போனை கையில் எடுத்தால் எதற்காக எடுக்கிறார்கள் என்பதை பார்த்து கவனிக்க வேண்டும். டேட்டிங்க் என்று செல்லும் பெண்கள் ஏமாந்து விடுகின்றனர். அதனால் குழந்தைகளை பெற்றோர் கவனிக்க வேண்டும். அனாதைகளின் அன்னையாகவும், ஏழைகளின் நண்பனாகவும் இருந்து பெண்ணியம் காப்போம்” என பேசியுள்ளார்.


மேலும் படிக்க: OTT Release: இந்த வாரம் ஓடிடியில் இவைதான்.. ஜெயிலர் முதல் குங் ஃபூ பாண்டா வரை டாப் ஹிட்ஸ் படங்கள்!


Jailer Success: வசூல் வேட்டையில் ஜெயிலர்.. 100 ஏழை குழந்தைகளுக்கான சர்ஜரிக்கு காசோலை வழங்கிய சன் பிக்சர்ஸ்