சமீபத்தில் உலக நாடுகளையே இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்த நிகழ்வாக சந்திராயன் 3 நிலவில் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. சந்திரயான் -2 வின் தோல்வியால் பல பாடங்களை கற்றுக் கொண்ட பின்னர் வெற்றிகரமான இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இஸ்ரோ. இதற்கு பங்காற்றியவர்கள் பலர் இருந்தாலும், முக்கிய பங்காற்றியவர் ஒரு தமிழர் ஆவர். ஆம், அவர் தான் வீர முத்துவேல். இஸ்ரோவின் முக்கியத் திட்டம் சந்திரயான் விண்கலம். சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழர்கள்தான் தொடர்ந்து மூன்று முறையாக இருந்து வருகின்றனர்.




சந்திரயான் 1,2 ஆகிய விண்கலத் திட்டங்களில் தமிழர்கள்தான் திட்ட இயக்குநராக செயல்பட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது சந்திரயான் 3 திட்ட இயக்குநராகவும் தமிழரே முக்கியப் பங்காற்றி உள்ளார். விஞ்ஞானி வீர முத்துவேல் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை பழனிவேல் ரயில்வேயில் ஊழியராகப் பணிபுரிந்தவர். அதனைத் தொடர்ந்து வீர முத்துவேலும் ரயில்வே பள்ளியில் படித்து தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். விண்வெளி மீது வீர முத்துவேல் கொண்ட தீராப் பற்றுதான் இவரை தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை படிக்க வைத்தது. 




தொடர்ந்து பணிக்கு சென்ற அவரை அவருக்கு இருந்த கல்வியின் ஆர்வம் காரணமாக சென்னை ஐஐடியில் மேற்கொண்ட படிப்பை படித்து முடித்த வீரமுத்துவேல், அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளை தொடர்ந்து வந்தார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் 1989 ஆம் ஆண்டு தேர்வெழுதி விஞ்ஞானியாக சேர்வதற்கு வீர முத்துவேலுக்கு சூழல் அமைந்தது. இதன் பிறகு இவரை வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பல நிறுவனங்கள் வேலைக்கு அழைத்தது. ஆனால், இஸ்ரோவிலேயே தொடர்ந்து பணியாற்ற அவர் விரும்பினார். 




 


விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக் கட்டுரையை 2016 -ல் சமர்பிக்கிறார். அதற்கான சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வில் வீர முத்துவேல் கையாண்ட தொழில்நுட்பம் விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கும், விண்கலத்தின் ரோவர் பகுதியை சரியாக இயக்குவதற்கும் உதவும் வகையில் இருந்தது. 30 ஆண்டு காலமாக இஸ்ரோவில் பல்வேறு பதவிகளிலும், திட்டங்களிலும் பணிபுரிந்திருக்கிறார் வீர முத்துவேல். இந்த அளப்பரிய அனுபவத்திற்குப் பிறகு கடந்த 2019இல் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராகப் பணியமர்த்தப்படுகிறார். 




வீர முத்துவேல் மேற்கொண்ட ஆய்வுதான் இந்தப் பதவிக்கு முக்கிய காரணம். வீர முத்துவேல் 29 துணை இயக்குநர்களுடனும், விஞ்ஞானிகளுடனும் பொறியாளர்களுடனும் இணைந்து பணியாற்றி சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த பயணமும் திட்டமிட்ட நேரப்படி கச்சிதமாக நடந்து வெற்றி பெற்றிருப்பது பெருமிதமாக உள்ளது. நிலவின் தென் துருவத்தின் அருகில் லேண்டரைக் கொண்டு சென்று நிலவைத் தொட்ட முதல் நாடு, நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தியா” என வீரமுத்துவேல் பெருமிதமாகத் தெரிவித்திருக்கிறார். 


நிலாவில் விண்வெளி மையம் அமைக்க வேண்டும்’ - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி


இந்நிலையில் இஸ்ரே விஞ்ஞானி சிவன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் பலரும் அறிவியலை கடந்து ஆன்மீகத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். அந்த வகையில் சந்திராயன் வெற்றியை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் வருகை தந்து சுவேதாரண்யேஸ்வரர், அகோரமூர்த்தி, புதன் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.