இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில்; , சூரியா-ஜோதிகா தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் . இந்த படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் வெகு நாட்களுக்கு பிறகு வெளியான குடும்ப திரைப்படம் என்பதால் , மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தில் சத்தியராஜ் , பானுப்பிரியா, சரவணன் ,ஆயிஷா , விஜி என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகை விஜி நேர்காணல் ஒன்றில் , தான் நடித்த கிளைமேக்ஸ் சீன் உருவான விதம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.


 






 


அதில் ” காலையில 13, 14 பக்கம் பேப்பரை கொண்டு வந்து கொடுத்து, இதுதான் மேடம் டயலாக்... கேட்டீங்களே..,படிங்க மேடம் என கொடுத்தாங்க..அடேங்கப்பா போயிட்டே இருக்கு.இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக கொடுத்தாங்க. எல்லாத்தையும் மண்டையில ஏத்திக்கிட்டேன். 10 மணிக்கு ஷார்ட் . ஒரு 100 பேர்க்கிட்ட இருப்பாங்க. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ல இருந்து பெரிய பெரிய நடிகர்கள் வரை எல்லோருமே இருக்காங்க. டேக் போகலாமா? மானிட்டர் இல்லைனு சொல்லுறாங்க.. ஒரே டேக்ல பண்ண முடியுமானு கேட்டாரு இயக்குநர். நான் சரினு சொல்லிட்டேன். கார்த்தி எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்குறாரு . என்னடா மானிட்டர் இல்லை, ஒரே டேக்குனு சொல்லுறாங்க  அப்படினு. அந்த சீன் எப்படினா ஒருத்தர்க்கிட்ட கத்தனும் , ஒருத்தர்க்கிட்ட அழனும் , ஒருத்தர்க்கிட்ட கெஞ்சி கேட்கனும் அப்படி எமோஷ்னலான சீன்.  அந்த டயலாக் அத்தனையும் ஒரே ஷார்ட்ல எடுத்தோம். ஆனால் படத்துல பார்த்தா அப்படி தெரியாது, ஏன்னா எல்லோருக்கும் குளோஸ் அப் ஷார்ட்ட எடிட்ல போட்டாங்க.


சீன் முடிச்சுட்டு , முந்தானையில மூக்க துடைச்சுட்டு உட்காருவது மாதிரி ஷார்ட் , இயக்குநர் கட் சொல்ல மாட்டேங்குறாரு . நான் அழுதுக்கிட்டே , சார் கட் சொல்லுங்க சார்னு சொன்னேன். அதன் பிறகு அவர் மானிட்டர் பார்த்துக்கிட்டு இருந்தாரு. அழுதுட்டாரு. நான் உள்ளே போனதும் என்னை அழ வச்சுட்டீங்க மேடம் அப்படினு சொன்னாரு. இது மாதிரி ரெண்டு மூனு படங்கள்லதான் அமையும் என்றார். மேலும் பேசிய அவர், சில பெரிய படங்கள்ல ஏன் நடிச்சோம்னு வருத்தப்பட்டிருக்கேன். இனிமேல் இதுமாதிரி பண்ணக்கூடாதுனு நினைச்சுருக்கேன்.” என்றார் விஜி