விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மஹான்’ (Mahaan). கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனம் வந்திருக்கும் நிலையில், படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் இடம் பெறாததற்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.


முன்னதாக, மஹான் திரைப்படத்தின் நடிகர், நடிகைகளை படக்குழு அறிவித்தபோது வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனை அடுத்து விக்ரம் - வாணி போஜன் இருக்கும் படத்தின் ஸ்டில் வெளியாகி வைரலானது. இதனால், திரையில் வாணி போஜனை காண அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.


ஆனால், படத்தில் வாணி போஜன் நடித்திருந்த காட்சிகள் இடம் பெறாதது சர்ச்சையை கிளப்பியது. படத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து வாணி போஜன் கருத்து தெரிவித்திருக்கிறார். “மஹான் படத்திற்காக 8 -9 நாட்கள் வேலை செய்திருக்கிறேன். படத்தின் முதல் பாதி கதையில் நான் நடித்திருந்தேன். ஆனால், நான் நடித்திருந்த காட்சிகளுக்கும், இரண்டாம் பாதிக்கும் சம்பந்தமே இருக்காது. இதனால், கார்த்திக் சார் தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்புவிடுத்து விளக்கினார். இப்படி ஒரு சூழலில் என்ன செய்வது என்று என்னிடம் கேட்டார். வேண்டுமென்றால் எடிட்டிங்கில் எடுத்துவிடுங்கள் என தெரிவித்திருந்தேன்.






படம் வெளியானவுடன் சில யூட்யூப் சேனல்கள் படக்குழு என்னை ஏமாற்றிவிட்டதாக பதிவிட்டிருக்கின்றனர். அதில் உண்மையில்லை. எனக்கு அனுபவம்தான் முக்கியம். இப்படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவத்தை தந்தது. விக்ரம் சார் போன்ற அனுபவ நடிகருடன் நடித்ததில் மகிழ்ச்சி. இப்படம் வெளியானால் என்னை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், நான் நடித்திருந்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றவுடன் சிலர் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், சில ரசிகர்கள் ஏமாற்றமடைந்தது வருத்தத்தையும் தருகிறது” என தெரிவித்திருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண