வளர்ந்து வரும் மலையாள  நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ஐடெண்டிடி (அடையாளம்) என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் திரிஷா. மலையாளத்தில் அவர் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் மாஸ் காட்டும் திரிஷா


தமிழ் சினிமாவில் க்ளாசிக் நடிகைகளில் ஒருவர் திரிஷா. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக நடித்து வரும் திரிஷா சில காலம் பெரியளவிலான படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இத்தகைய சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தனது நடிப்பாலும் அழகாலும், அனைவரையும் கிறங்கடித்தார் திரிஷா. தனது இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டார். தற்போது அவர் நடிக்க இருக்கும் படங்கள் குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்தபடி இருக்கின்றன.


லியோ


கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜயுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார் நடிகை திரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் அவரைப் பார்க்க மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


திரிஷா சிரஞ்சீவி


அதே மாதிரி தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியுடன் பல ஆண்டுகளுக்குப் பின் இணைந்து நடிக்க இருக்கிறார் திரிஷா. கடந்த 2020-ஆம் வருடம் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிக்க இருந்தார் திரிஷா. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் திரிஷா.


மூன்றாவது முறையாக மலையாளத்தில்





 
அண்மையில் வெளியாகியிருக்கும் தகவலின்படி மலையாள நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் ஐடெண்டிடி (அடையாளம் ) என்கிறப் படத்தில் நடிக்க இருக்கிறார் திரிஷா. அகில் பால் மற்றும் அனாஸ் கான் ஆகியவர்கள் இந்தப் படத்தை இயக்குகிறார்கள். முந்தையதாக நிவின் பாலியுடன் ஹே ஜூட் மற்றும் மோகன்லாலுடன் ராம் ஆகியப் படங்களில் நடித்த திரிஷா தற்போது மூன்றாவது முறையாக மலையாளப் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரிஷா நடிக்கும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது


 


விடாமுயற்சி


 


கூடுதலாக எதிர்பார்க்கக் கூடிய தகவல் என்னவென்றால் மகிழ் திருமேனி இயக்கி அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜிதுடன் இணைய இருக்கிறார் திரிஷா என்பதே. திரிஷா தனது கரீயரை ரீஸ்டார் செய்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.