RasiPalan Today July 09: 


நாள்: 09.07.2023 - ஞாயிற்றுக்கிழமை


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


இராகு :


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுகமான சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் சார்ந்த பயணங்கள் கைகூடும். சிந்தனைகள் நிறைந்த நாள்.


ரிஷபம்


எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் சந்திப்பு மற்றும் ஆதரவு ஏற்படும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். கட்சிப் பணிகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பேச்சுக்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். சகோதரர் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பயணங்களில் சில விரயங்கள் நேரிடலாம். வரவு நிறைந்த நாள்.


மிதுனம்


எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு பராமரிப்பு சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான அலைச்சல்களால் அனுபவம் மேம்படும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தாமதம் குறையும் நாள்.


கடகம்


வெளிப்படையான சில பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். செலவு நிறைந்த நாள்.


சிம்மம்


எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.


கன்னி


மனம் விரும்பிய படி செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். முயற்சிகள் நிறைந்த நாள்.


துலாம்


நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.


விருச்சிகம்


வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


தனுசு


மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தனவரவுகளால் திருப்தி ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். தனிப்பட்ட சில விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களின் வழியில் பொருட்சேர்க்கை ஏற்படும். அரசு காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.


மகரம்


மனதில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் மேன்மை ஏற்படும். அசதிகள் குறையும் நாள். 


கும்பம்


கனிவான பேச்சுக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.


மீனம்


ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வெளியூர் சார்ந்த பயணங்கள் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் மாற்றம் நேரிடும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். நேர்மை வேண்டிய  நாள்.