தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளாக, அன்று பார்த்தது போல் இன்றும் அதே அழகுடனும், சிரிப்புடனும் சினிமாத்துறையில் சிறப்பாக பயணித்து வருகிறார்; 


 




லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சரவணன் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிப்பில் டிசம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ராங்கி; இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ‘பொன்னியின் செல்வன்’  ‘ ராங்கி’ அடுத்ததாக ‘தளபதி 67’ னில் நடிக்க வாய்ப்பு என கடந்த 2022ம் ஆண்டு நடிகை திரிஷாவிற்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. 


 






 


நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களின் ஜோடியாகவும் நடித்து விட்டார்; அந்த வகையில் ராங்கி படத்தின் விளம்பரத்திற்காக நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது நடிகை த்ரிஷாவிடம் தமிழ் சினிமாவில் அவர் ஜோடியாக நடித்த ஹீரோக்கள் குறித்து சுவாரஸ்யமான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் ஜாலியாக பதிலளித்து இருந்தார் நடிகை த்ரிஷா.


அதில், ஹீரோக்களின் போன் நம்பர்களை நீங்கள் மொபைலில் எப்படி சேவ் செய்து வைத்து இருப்பீர்கள் என கேட்கப்பட்டது; அதற்கு பதிலளித்த த்ரிஷா,  “ சிம்புவை சிம் என்றும் தனுஷை 'டி' என்றும் சில சமயங்களில் பிரபு என்றும் அழைப்பேன். காரணம், அவரது இயற்பெயர் பிரபு என்பதால் அவரை அப்படியே அழைப்பேன் என்றார்.                           


விஜய்க்கு எப்படி பெயர் ஸ்டோர் செய்து வைத்து இருப்பீர்கள் என்று கேட்டால் அவரை சீட்டா என வைப்பேன். அதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. கில்லி படத்தின் சமயத்தில் அவர் ஒரு கோட் அணிந்திருப்பார். அதில் சீட்டா ( சிறுத்தை)  என பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும். அதனால் நாங்கள் அனைவருமே அவரை சீட்டா ( சிறுத்தை) என்றே அழைப்போம். 


நடிகர் அஜித் போன் நம்பரே என்னிடம் இல்லை; அவர் போன் உபயோகிப்பது மிகவும் குறைவு. ஆனால் அப்படி சேவ் செய்ய வேண்டும் என்றால் ஜென்டில்மென் என வைப்பேன் என்றார். நடிகர் ஆர்யாவுக்கு சற்றும் யோசிக்காமல் ரவுடி என்றே சேவ் செய்வேன். ஆனால் உண்மையிலேயே ஆர்யாவை எனது போனில் நான் ஜாம் என ஸ்டோர் செய்து வைத்துள்ளேன் என்றார் த்ரிஷா.