உலகின் மிகப்பெரிய 5வது வைரக்கல் தன்னிடம் இருப்பதாக வைரலான செய்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரி-2 மூலம் தமன்னா பேசப்பட்டார். அதை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காவாலா படத்தில் தமன்னா நடித்துள்ளார். 


அண்மையில் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி ஹிட் அடித்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், திரை பிரபலங்களும் காவாலா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இன்ஸ்டகிராமில் காவாலா ரீல்ஸ் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. காவாலா பாடலால் பெரிதாக பேசப்பட்ட தமன்னா மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளார். தமன்னாவிடம் உலகின் விலை உயர்ந்து 5வது மிகப்பெரிய வைரம் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் தகவல்கள் வெளியாகின. 


2019ம் ஆண்டு வெளிவந்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ராம்சரணுடன் இணைந்து தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும், படத்தில் தமன்னாவின் நடிப்பு பேசப்பட்டது. சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடடித்ததற்காக அந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ராம்சரணின் மனைவி உபாசனா, தமன்னாவுக்கு வைர மோதிரத்தை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது.


மிகப்பெரிய வைரக்கல் போன்று தோற்றம் அளிக்கும் மோதிரத்தை தமன்னா அணிந்திருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அந்த மோதிரம் குறித்த உண்மை தகவலை தமன்னாவே பகிர்ந்துள்ளார். அதாவது தன்னிடம் இருப்பது உண்மையில் வைரமே இல்லை என்றும், அது  வைர டிசைன் கொண்ட பாட்டில் ஓபனர் என்றும் தமன்னா கூறியுள்ளார். இதனால், அது நிஜ வைரம் இல்லையா டம்மியா என பலரும் கிண்டலடித்து வருகின்றனர். 


ரஜினியுடன் தமன்னா நடித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதை போல் மெகா சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவிக்கு ஜோடியாக ’போல ஷங்கர்’ படத்தில் தமன்னா நைட்த்துள்ளார். அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் படத்தின் ரீமேக்கான இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Thangalaan Budget: ரத்தமும் சதையுமாக இருக்கும் விக்ரம் நடிக்கும் தங்கலான்: படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?


Sync Movie Review: 'மொத்தமே ஒன்றரை மணி நேரம் படம் தான்' - திகில் கிளப்பியதா “சிங்க்” படம்?.. விமர்சனம் இதோ..!