Watch video: பாத்ரூமில் கவர்ச்சி போட்டோஷூட் - வீடியோ வெளியிட்ட தமன்னா

திரைப்படம், சீரியஸ்களில் பிசியாக நடித்துவரும் விதவிதமான போட்டோஷூட்களை எடுத்து, அதை தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

Continues below advertisement

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இருந்தப்போதும் கல்லூரி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த அங்கீகாரத்தைப்பெற்ற இவர் தொடர்ந்து, வியாபாரி, அயன், பையா, பாகுபலி போன்ற பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். இதுப்போன்ற பல வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆக்சன் என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார். 

Continues below advertisement

இதனையடுத்து இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகைகள் பலர்  வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திரா சுப்ரமணியம் இயக்கிய நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார்.  

கிரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்த தொடர் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தமையால் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனையடுத்து சினிமாத்துறையை விட்டு வெப் சீரிஸில் நடிப்பதில் தமன்னா அதிக ஆர்வம் காட்டிவருகிறார். 

தெலுங்கில் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள F3 விரைவில் வெளியாகியுள்ளது. திரைப்படம், சீரியஸ்களில் பிசியாக நடித்துவரும் விதவிதமான போட்டோஷூட்களை எடுத்து, அதை தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், நீல நிற கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை தமன்னா வெளியிட்டிருந்தார். தற்போது அதே உடையில் பாத்ரூமில் அவர் நடத்திய போட்டோஷுட்கள், காரில் செல்வதை  வீடியோவாக வெளியிட்டுள்ளார் தமன்னா. அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola