சுனைனா
2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி , வம்சம் , நீர்ப்பறவை , சமர் , வன்மம் , தெறி , நம்பியார் உள்ளிட்டப் படஙகளில் நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் சுனைனாவுக்கு ரசிகர்களிடம் எப்போது ஒரு ஸ்பெஷல் இடம் இருந்து வருகிறது. கடந்த சில நாட்கள் முன்பாக நடிகை சுனைனா தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். ஆனால் தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபரைப் பற்றிய தகவலை அவர் தெரிவிக்கவில்லை. இப்படியான நிலையில் சுனைனா திருமணம் செய்துகொள்ள இருக்கும் அந்த நபரைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல யூடியுபர் உடன் திருமணம்?
சுனைனா பிரபல யூடியுபரான கலித் அல் அமேரி என்பரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்கள் முன்பு இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த வாரம் தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கலித். அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர். இப்படியான நிலையில் தனது திருமண ஏற்பாடுகளுக்காக கலித் துபாயில் இருந்து இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் நடிகை சுனைனா என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கல் பரவி வருகின்றன.
துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி தனது பெயரில் ஒரு பிரபல யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது.