கோவை வஉசி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டமன்றத்தில் கோவை தொகுதிக்கு குரல் கொடுக்கும் போது, கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்துள்ளதாக துறை சார்ந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள். அமைச்சர்கள் வாய்ப்பிருந்தால் கோவைக்கு வரும் போது, எனது தொகுதிக்கு வர வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய விடீயோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஜனநாயகமாக பேசவிடுவதில்லை. மேட்டுபாளையம் - கோத்தகிரி சாலையில் நீட் எதிரான வாசகங்கள் மற்றும் இந்தியா ஒழிக என்று எழுதுகிறார்கள். இது கண்டிக்கதக்கது. மத்திய, மாநில அரசுக்கு பல முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இது போன்று இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்களை தடுக்க வேண்டும். திமுக அரசு ஊக்குவிக்க கூடாது.


நடிகர் விஜய்யின் கருத்து


30  நாட்களுக்கு மேலாக நடக்கும் மானிய கோரிக்கை இந்த முறை 8 நாட்களுக்குள் முடிவடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. தமிழகம் போன்ற மிக முக்கியமான மாநிலத்திற்க்கு இந்த நாட்கள் போதாது. இன்னும் மக்களின் பிரச்சனையை ஆழமாக விவாதிக்க வேண்டும். எதிர்கட்சிகள் பேசும் போது, அதிக குறிக்கீடுகள் உள்ளது. சட்டமன்றத்தில் தொகுதி மக்களுக்காக பேசும் விடீயோவை கூட தர மறுக்கிறார்கள். ஜனநாயக தன்மையோடு இயங்காத சட்டபேரவையாக சவாலோடு பேச வேண்டியதாக இருக்கிறது. நல்ல தலைவர்கள் தமிழகத்திற்க்கு வர வேண்டும் என நடிகர் விஜய் சொன்னதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. படித்தவர்களைவிட மக்களுக்காக உணர்வுபூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை. சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்க்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.




மத்திய அரசு காலச்சூழலுக்கு ஏற்றவாறு சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்திருந்தாலும், பெயரை பொறுத்தளவுக்கு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழி தெரியாதவர்களுக்கு சில வார்த்தைகளை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதை மத்திய தலைமையிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். சட்டத்தில் இன்று பலதிருத்தங்கள் தேவை. உயர்கல்வி துறையை பொறுத்தவரை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கவர்னருக்கு எதிராக மிக தனிப்பட்ட முறையில் எதிரான மனநிலையோடு பேசுவது உயர்கல்வி துறையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நானா, நீயா என்கிற வகையில் மாநில அரசு எடுத்துக் கொள்கிறது. கவர்னர் பொதுவெளியில் பேசுவதை இவர்களின் சித்தாந்திற்க்கு எதிராக பேசுவதாக எடுத்து கொண்டு, அவருக்கு எதிராக பேசுவது உயர்கல்விதுறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய சூழல் உள்ளது.


அண்ணாமலை ஆக்ஸ்போர்டு செல்கிறாரா?


திராவிட மாடலில் கிக் தான் முக்கிய என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக்கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. உயர்கல்வித்துறை அமைச்சர் ஆளுநர் குறித்து கவர்னர் குறித்து தனிப்பட்ட முறையில் பேசுவதும் எதிரான மனநிலையில் செயல் படுவதும்ம் உயர் கல்வித் துறையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. கவர்னர் அவருக்கு இருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு பொதுவெளியிலும் நிகழ்ச்சிகளில் பேசுவதை எல்லாம் இவர்களது சித்தாந்தத்திற்கு எதிராக இருப்பதாக நினைத்து செயல்படுவது உயர்கல்வித்துறையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார். அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்பிற்கு செல்வதாக வெளியாகும் தகவல் குறித்து கேட்டபோது "எனக்கும் அதுப்பற்றி தெரியவில்லை அவரிடம் இன்னும் அது பற்றி பேசவில்லை" என பதிலளித்தார்